துப்பாகியால் சுட்டால்???

கண்ணாடிக் கதவில் துப்பாகியால் சுட்டால் துளை உண்டாவதும் கல்லால் அடித்தால் தூளாக உடைந்து போவதும் ஏன் ?
இயக்கத்தில் உள்ள எந்த பொருளிலும் -- அது துப்பாக்கிக் குண்டோ சாதாரணக் கருங்கல்லோ எதுவாயினும் அவற்றில் -- ஓரளவு விசை இயக்க ஆற்றல் (kinetic energy) உள்ளது; இந்த ஆற்றலை உந்தம்(momentum) என்பர்.
இவ்வுந்தம் பொருள் செல்லும் நேர்விரைவைப் (velocity)
பொறுத்தது. அதாவது நேர்விரைவு மிகுதியாக இருந்தால் உந்தமும் மிகுதியாக இருக்கும். துப்பாக்கிக் குண்டு போன்ற எடை குறைந்த தக்கையான பொருளும் மிக விரைவாகச் செல்லும் போது அதனுடைய உந்தம்இ மெதுவாகச் செல்லும் எடை மிகுந்த பொருளின் உந்தத்தைவிடக் கூடுதலாக இருக்கும்.

துப்பாக்கியிலிருந்து வெளியேறுகின்ற குண்டு மணிக்குப் பல நூறு மைல் விரைவில் செல்வதால்இ அதன் உந்தம் மிகுதியாக இருக்கும். மேலும் அவ்வளவு விரைவில் செல்லும் குண்டு சுழன்றுகொண்டே செல்லும். அவ்வாறு பாய்ந்து செல்லும் குண்டு கண்ணாடிக் கதவால் தடுக்கப்படும்போதுஇ அதன் சிறு அளவு உந்தம் கண்ணாடிக்கு மாற்றப்பெறுவது உண்மையே; அதே நேரத்தில் துப்பாக்கிக் குண்டு சுழன்றவண்ணம் விரைந்து செல்வதால் கண்ணாடிக் கதவில் துளையை உருவாக்கி அதன் வழியே வெளியேறிவிடுகிறது.
மாறாகக் கதவை நோக்கி வீசியெறியப்பட்ட கல் குறைந்த வேகத்தில் செல்கிறது; அது கண்ணாடிப் பலகையைத் தொடும்போது அதன் முழு உந்தமும் கண்ணாடிக்கு மாற்றப்பெறுகிறது. இவ்வாறு கல்லில் பொதிந்திருந்த முழு ஆற்றலும் கண்ணாடிக்கு மாற்றமுறுவதோடு அதன் தகைவுப் பகுதிகளிலும் --அதாவது கண்ணாடி மூலக்கூறுகள் வலிமை குன்றி பிணைக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலும் - பரவுகிறது. இதன் விளைவாகக் கல்லெறிபட்ட கண்ணாடிக் கதவுப் பகுதிகள் உடைந்து சிதறுகின்றன.

நன்றி இணையம்

Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்