Posts

Showing posts from February 5, 2011

மனிதன் இதுவரை உள் சென்றதே இல்லாத பிரமிப்பூட்டும் மிகப்பெரும் குகை

Image
பல காலங்களாக வியட்நாமை மனம் கொள்ளை கொள்ளும் வனப்புடன் கூடிய குகைகளின் நாடாகத்தான் புவியியல் ஆய்வாளர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். அவற்றில் பல குகைகளுக்குள் மனிதன் இதுவரை உள் சென்றதே இல்லை. தற்போது அங்கே உலகின் மிகப்பெரும் குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது . ஹேங் சன் தூங் எனப்படும் அக்குகை, ஒப்பீட்டளவில் மொத்த நியூயார்க் நகர மக்கள் தொகையினையும் கொள்ளளவாக கொள்ளகூடியது ஆகும். அன்னாமைட் மலைகளில் உள்ள அந்த பிரம்மாண்ட குகையினுள் பெரிய காடும் அதனூடே ஒரு ஆறும் ஓடுகிறது. இதற்கென அங்கேயே சுற்றி சுழலும் சிறு மேகக்கூட்டங்களும் உள்ளன. இந்தக் குகையின் முடிவு இன்னும் அறியப்படவில்லை. இதற்கு மலைநதி குகை என்று தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மாண்ட குகை வியட்நாமின் மத்தியில் லாவோஸ் எல்லையினையும் சேர்ந்த நில அமைப்பில் உள்ள சுமார் 150 குகைகளின் பெரும் தொடரின் ஒரு அங்கம் என்று கருதப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஹோவர்ட் மற்றும் லிம்பர்ட் ஆகியோர் இந்த ஹேங் சன் தூங் குகைக்கு வந்த போது அதனுடைய மிகப்பெரும் பக்கசுவர் அவர்களால் தாண்ட இயலாததாக இருக்கவே, மீண்டும் இந்தக் குகை

ஆறு கோள்களைக் கொண்ட புறக்கோள் தொகுதி கண்டுபிடிப்பு

Image
கெப்லர்-11 என்ற சூரியனைச் சுற்றி ஆறு கோள்கள் வலம் வருகின்றன. படம்: நாசா பூமியில் இருந்து ஏறத்தாழ 2000 ஒளியாண்டுகள் தூரத்தில் கெப்லர்-11 என்ற சூரியனை ஒத்த விண்மீன் ஒன்றைச் சுற்றி வரும் ஆறு புறக்கோள்களை நாசாவின் கெப்லர் திட்ட வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆறு கோள்களும் பூமியை விட இரண்டு முதல் நாலரை மடங்கு ஆரையையும் இரண்டு முதல் 13 மடங்கு வரை திணிவையும் கொண்டுள்ளன. இவற்றில் ஐந்து கோள்கள் எமது சூரியனை புதன் கோள் சுற்றி வருவதைவிட குறைந்தளவு தூரத்தில் தமது சூரியனைச் சுற்றி வருகின்றன . கெப்லர்-11 தொகுதியுடன் எமது சூரியத் தொகுதி ஒப்பீடு, படம்: நாசா இந்தக் கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்கள் செவ்வாய்க்கிழமை நேச்சர் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 'கெப்லர்-11 என்பது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பான கோளமைப்பு ஆகும். இதன் அமைப்பு மூலம் இது தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்' கெப்லர் திட்ட ஆய்வாளர் ஜாக் லிசாவர் தெரிவித்தார். 'இந்த ஆறு புறக்கோள்களும் பாறைகளையும் வாயுக்களையும் கொண்ட ஒரு கலவைகள். நீரையும் இவை கொண்டிருக்கலாம்' என அவர் தெரிவித்தார். கெப்