Posts

Showing posts from April 22, 2011

உலகின் முதல் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை இலை

Image
அமெரிக்காவின் மசாகூசட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசியரான டேனியல் நோசேரா தலைமையிலான குழு உலகின் முதல் செயற்கை இலையினை உருவாக்கியுள்ளனர். இந்த கண்டுப்ப்டிப்பானது அறிவியல் உலகில் குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். இதன் உருவம் உண்மையான இலை போன்று இருக்காது. ஆனால் ஒரு இலையின் செயற்பாடுகளை இது துள்ளியமாக செய்யும். உண்மை இலையின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இந்த இலையினை உருவாக்கியுள்ளனர். மின்சாரம் தயாரிக்க செயற்கை இலைகளை தண்ணீரின் மீது மிதக்க விடப்பட்டு இயற்கையில் கிடைக்கக் கூடிய சூரிய ஒளியினை உள்வாங்கி தண்ணீரின் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை இது பிரித்து அதன் வழியாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எனவும் தெரிகிறது. அவற்றை வீடுகளுக்கு அருகே இருக்கும் பேட்டரிகளில் சேமித்து வைத்துக் கொள்ளும். அந்த பற்றரிகளில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியும். இந்த முறையிலான மின்சார ஆற்றலை பெறுவதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு மிகவும் குறைவான முறையிலும் இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புறங்களிலும் கூட மின்சாரத்தை எளிதாகப் பெறக்கூடியதாக இருக்கும். ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன் ஞசான் டேர்னர்