Posts

Showing posts from May 26, 2011

பௌர்ணமி தினத்தில் தேள்களில் எவ்வாறு ஒளி வீசுகின்றது.

Image
இருண்ட சூழ்நிலையில் தேள்களிலிருந்து புற ஊதாக் கதிர்வீச்சுகள் ஒளிர்ந்தால் பார்ப்பவரை திகிலடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. பூரண பௌர்ணமி தினங்களில் இயற்கைக்கு மாறான வகையில் நியோன் நீல நிற கதிர்கள் தேள்களின் உடற்பாகங்களிலீருந்து ஒளிர்கின்றன. தேள்களின் எலும்புப் பகுதிகளில் புரதப் பொருளின் மீது புற ஊதாக் கதிர்கள் தாக்கமுறுவதனால் இவ்வாறு மனிதக் கண்களுக்கு அவை ஒளி வீசுவதாக் தோன்றுகின்றது. தேள்கள் தொடர்பான ஆய்வாளர்கள் இந்த வினாவிற்கு விடைகாண நீண்ட காலத்தை செலவிட்டனர். ஏனைய தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக ஒரு சாராரும், பாலைவனங்களில் தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக மற்றொரு சாராரும் தெரிவிக்கின்றனர். இரையை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு ஒளிர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக இந்த ஒளிமாற்றச் செயற்பாடு நிகழ்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வாறெனினும், தீவிர ஆய்வுகளின் போது மேற்குறிப்பட்ட எந்தவொரு காரணியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. தேள்கள் எவ்வாறு ஒளிர்கின்றன என்பது தொடர்பில் கலிபோர்