Posts

Showing posts from August 7, 2010

உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு

Image
ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா கொழுத்த மனிதன் (Fat Man) என்ற பெயரைக் கொண்ட இரண்டாவது அணுகுண்டை வீசி ஆகஸ்டு 9 உடன் 65 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது உலக வரலாற்றில் இரண்டு முறை அணுகுண்டு போருக்காக உபயோகபடுத்த பட்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா தன்னை தாக்கியஜப்பானை தாக்கியழிக்க 2 அணுகுண்டுகளை பயன்படுத்தியது. முதல் அணுகுண்டு சின்னப் பையன் ( Little boy ) என்று பெயரிடபட்டு ஆகஸ்டு 6ஆம் நாள் முன்காலை இரோசிமா நகரின் மீது வெடிக்க பட்டது. மூன்று நாட்களுக்குப் பின் இரண்டாவது அணுகுண்டு கொழுத்த மனிதன் ( fat man ) நாகசாகி நகரின் மீது வீச பட்டது. இந்த குண்டு வீச்சுகளால் பலியானோர் எண்ணிக்கை சுமார் 120,000. கதிரியக்கத்தினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை கணக்கிலடங்கா . ' கொழுத்த மனிதன்' ( Fat Man ) 'கொழுத்த மனிதன்' ( Fat Man ) என்பது ஜப்பான் நகரான நாகசாக்கி மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டாகும் . அமெரிக்காவின் முன்னைய அணுவாயுத வடிவமைப்புக்கு