உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவாகள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும் . அல்பிரட் நோபல் Alfred Bernhard Nobel (பிறப்பு:(சிட்டாக்கோம் சுவீடன் 21 அக்டோபர் 1833 – Sanremo இத்தாலி 10 December 1896)) நோபல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். இவரின் நினைவாக நோபலியம் என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது. பெஞ்சமின் பிராங்கிளின் ((Benjamin Franklin (ஜனவரி 17 1706 – ஏப்ரல் 17 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும் கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12 1809 - ஏப்ரல் 19 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடை...