ஜூன் 14 உலக வலைப்பதிவர் நாள் கொண்டாடுவோம்

உலக வலைப்பதிவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கணிப்பொறி மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவோர் ஒவ்வொருவரும் தனித்தனியாகவோ குழுவாகவோ பல வலைப்பதிவுகளை உருவாக்கிப் பயன்படுத்தப் போகும் காலம் வெகுவிரைவில் வந்துவிடும். வலைப்பதிவுகள் இலவசச் சேவையாக வழங்கப்படுவது மட்டுமே அதன் பரவலுக்கும் பயன்பாட்டுக்கும் காரணம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும் படைப்பாக்கத் தாகமும் எழுதிய பதிவுகள் உடனே உலகெங்கும் பரவும் வேகமும் வலைப்பதிவுகளின் பரவலாக்கத்திற்கு அடிப்படைக் காரணங்களாகின்றன. உலக வலைப்பதிவுகளின் வரலாறு 1999 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் வலைப்பதிவுகள் பெற்றிருக்கும் வெற்றி நம்மை மலைக்க வைக்கிறது. வரும் காலங்களில் வலைப்பதிவுகள் எட்டிப்பிடிக்கப் போகும் சிகரங்கள் எத்தனையோ . உலகக் கணிப்பொறிகளை இணைத்துத் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் இணையம் உலகை ஒரு மேசையளவிற்குச் சுருக்கிவிட்டது. கொட்டிக் கிடக்கும் அளப்பரிய தகவல்கள் இருமுனை மற்றும் பல்முனைத் தொடர்பு பல்ஊடகத் தொழில்நுட்பம் வேகம் உலக மொழிகளைக் கையாளும் யுனிகோட் குறிமுறை முதலான பல்வேறு சாத்தியக் கூறுகள் ...