தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் கழுகு கண்
கழுகால் அந்தளவுக்கு கூர்மையாக பார்க்க முடிவது எப்படி? முதலாவதாக கோல்டன் ஈகிளின் இரண்டு பெரிய கொட்டைக் கண்கள் அதன் தலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து விடுகின்றன. பொன் கழுகின் கண்கள் "எந்தளவுக்கு பெரியதாக இருக்க முடியுமோ அந்தளவுக்கு பெரியதாக இருக்கின்றன". மேலும் நமக்குள்ளதை விட சுமார் ஐந்து மடங்கு அதிகமான ஒளி உணர்வு செல்கள் கழுகின் கண்களில் உள்ளன. நமக்கு ஒரு சதுர மில்லி மீட்டரில் 200,000 கூம்பு செல்களே இருக்கின்றன. கழுகிற்கோ சுமார் 1,000,000 கூம்புசெல்கள் உள்ளன. ஒவ்வொரு உள்வாங்கியும் ஒரு நியுரோனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கண்களிலிருந்து மூளைக்கும் செய்திகளை சுமந்து செல்லும் கழுகினுடைய பார்வைநரம்பில் மனிதனுக்கு உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமான நார்கள் (Fibers) காணப்படுகின்றன. அந்தப் பறவைகள் நிறங்களை அடையாளங்கண்டு கொள்வதில் பலே கில்லாடிகளாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. இறுதியாக மற்றப் பறவைகளைப் போலவே இரையைக் கொன்று தின்னும் இப்பறவைகளின் கண்களிலும் சக்திவாய்ந்த"லென்ஸ்" உண்டு. இதனால் ஒரு அங்குலம் தூரமுள்ள பொருட்களிலிருந்து வெகு தொலைவிலுள்ள பொருட்கள் வரை எதையும் சட்டெ