உலகில் மிக வேகமாக நீந்தும் நீர் வாழ் உயிரினம்

கடல்நீரின் மேல்பகுதி நடுப்பகுதி மற்றும் தரைப்பகுதிகளிலும் அலைபடும் இடங்களில் இருந்து ஆழ்கடல் பகுதிகள் வரை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பல உயிரினங்கள் வாழ்ந்தாலும் ஆழ்கடலில் மிகமிக வேகமாக செல்லும் ஓர் அரிய ஜீவன்களில் ஒன்றே மயில் மீன் Sailfish (Istiophorus platypterus) . பறவைகளில் மயிலுக்கு தோகைகள் இருப்பதைப் போல இவ்வகை மீன்களுக்கும் தோகைகள் போன்று இறக்கைகள் இருப்பதால் இதனை மயில்மீன் என்கிறார்கள். இவ்வகை மீன்களின் மேல்புறத்தில் இரு இறக்கைகளும் இவால் பகுதியில் ஒரு இறக்கையும் இருக்கும். இந்த மீனின் மேல்தாடை கீழ் தாடையை விட இரு மடங்கு பெரிதாக இருக்கிறது. மீனின் உடல்பகுதியில் இருபுறமும் 20க்கும் மேற்பட்ட வெள்ளைநிற வரிக்கோடுகள் காணப்படுகின்றன. பறவைகளுக்கு அலகு இருப்பது போல இதன் அலகும் சுமார் 10அடி வரை நீளம் உடையதாகவும் மிகவும் கூர்மையானதாகவும் இருக்கிறது. இந்த அலகின் மூலம் படகுகளைக் கூட கொத்தி உடைத்து விடும் சக்தி உடையது. மீனின் மேல்பகுதி கரு ஊதா நிறத்திலும் அடிப்பகுதி வெள்ளை நிறம் கலந்த பிரவுன் கலரிலும் காணப்படுகிறது. ஒரு வருடத்தில் 1.2மீ முதல் 1.5 மீ வ...