சில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

இது பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும். பப்பாளி பப்பாளி (Carica papaya) ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பெப்ரவரி மார்ச் மாதங்களும் மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. அடங்கியுள்ள சத்துக்கள் பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ் மீதி ஃபிரக்டோஸ்(பழச்சர்க்கரை. விற்றமின் ஏ அதிகமாக உள்ளது. கனியக் கனிய விற்றமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும் சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும் பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும் நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விற்றமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விற்றமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விற்றமின் பி1இ விற்றமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன. பச்சைக் காயிலுள்ள பாலில் செரிமானத்திற்கு உதவும் நொதியப் ...