Posts

Showing posts from June, 2013

மனிதன் வரையும் உயிருள்ள மர ஓவியம் பொன்சாய்'

Image
  பொன்சாய்" என்ற பதம் எமக்கு ஜப்பானை நினைவூட்டினாலும் இதன் பிறப்பிடம் சீனா என்றே வரலாறு கூறுகின்றது. கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன் சீனாவில் 'புன்சாய்" என்ற குட்டை மரங்களை வளர்க்கும் பாரம்பரியம் பௌத்த துறவிகள் மத்தியில் தோன்றியது. கி.மு 7ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் சீனாவின் அரச தூதுவர்கள் இந்தக் கலையை ஜப்பானுக்கு அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஜப்பானின் சென் பௌத்த துறவிகள் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தியானமுறையாக பொன்சாய்களை வளர்க்கத் தொடங்கினர். நாளடைவில் ஜப்பானியர்கள் பல்வேறு விதமான நுணுக்கங்களையும் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியதால் இன்று பொன்சாய் ஒரு கலையாக உலகம் முழுவதிலும் பிரபல்யம் அடைந்துள்ளது. - See more at: http://btoptions.lk/serendib/tamilshow.php?id=656#sthash.B86JkeLb.dpuf  பொன்சாய்' என்ற பதம் எமக்கு ஜப்பானை நினைவூட்டினாலும் இதன் பிறப்பிடம் சீனா என்றே வரலாறு கூறுகின்றது. கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன் சீனாவில் 'புன்சாய்' என்ற குட்டை மரங்களை வளர்க்கும் பாரம்பரியம் பௌத்த துறவிகள் மத்தியில் தோன்றியது. கி

காற்று இல்லையென்றால் எந்த உயிரும் வாழ முடியாது? சர்வ தேச காற்று தினம் – ஜுன் 15

Image
    நம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக எண்ணி வணங்கினர். பஞ்ச பூதங்களான காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு இவற்றின் தொகுப்புதான் உலகமாகும். மனித நாகரீகம் வளர வளர இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது.இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழித்தான். மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனைநிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி பெட்ரோல் எடுத்து இயற்கையை நாசப்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்ட பிரதேசமாக மாற்றினான்.    மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான் பூமி வெப்பம், பூகம்பம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள். இந்த பஞ்ச பூதங்களின் பாதிப்பு தான் மனிதனை பல நோய்களுக்கு ஆளாக்கியுள்ளது. இயற்கையை நாம் எந்தளவுக்கு மாசு படுத்தியுள்ளோம் என்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கொஞ்சமாவது அறிந்து கொள்வோமா?    உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்றுதான். காற்று எங்கும் நிறைந்த பொருள். இதனை கண்ணினால் பார்க்க முடியாவிடினும், இதன் செயலால் இதனை உணர்ந்து கொள்கிறோம். ஆறு