மனிதன் வரையும் உயிருள்ள மர ஓவியம் பொன்சாய்'
பொன்சாய்"
என்ற பதம் எமக்கு ஜப்பானை நினைவூட்டினாலும் இதன் பிறப்பிடம் சீனா என்றே
வரலாறு கூறுகின்றது. கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன் சீனாவில்
'புன்சாய்" என்ற குட்டை மரங்களை வளர்க்கும் பாரம்பரியம் பௌத்த துறவிகள்
மத்தியில் தோன்றியது. கி.மு 7ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் சீனாவின் அரச
தூதுவர்கள் இந்தக் கலையை ஜப்பானுக்கு அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து
ஜப்பானின் சென் பௌத்த துறவிகள் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்
தியானமுறையாக பொன்சாய்களை வளர்க்கத் தொடங்கினர். நாளடைவில் ஜப்பானியர்கள்
பல்வேறு விதமான நுணுக்கங்களையும் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியதால்
இன்று பொன்சாய் ஒரு கலையாக உலகம் முழுவதிலும் பிரபல்யம் அடைந்துள்ளது. -
See more at:
http://btoptions.lk/serendib/tamilshow.php?id=656#sthash.B86JkeLb.dpuf
பொன்சாய்' என்ற பதம் எமக்கு ஜப்பானை நினைவூட்டினாலும் இதன் பிறப்பிடம் சீனா என்றே வரலாறு கூறுகின்றது. கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன் சீனாவில் 'புன்சாய்' என்ற குட்டை மரங்களை வளர்க்கும் பாரம்பரியம் பௌத்த துறவிகள் மத்தியில் தோன்றியது. கி.மு 7ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் சீனாவின் அரச தூதுவர்கள் இந்தக் கலையை ஜப்பானுக்கு அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஜப்பானின் சென் பௌத்த துறவிகள் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தியானமுறையாக பொன்சாய்களை வளர்க்கத் தொடங்கினர். நாளடைவில் ஜப்பானியர்கள் பல்வேறு விதமான நுணுக்கங்களையும் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியதால் இன்று பொன்சாய் ஒரு கலையாக உலகம் முழுவதிலும் பிரபல்யம் அடைந்துள்ளது.
ஜப்பானிய மொழியில் 'பொன்' என்றால் தட்டையான கொள்கலன் என்றும் 'சாய்' என்றால் மரம் என்றும் பொருள்படுகின்றன. தட்டையான கொள்கலன் ஒன்றில் அதிக உயரமில்லாமல் குட்டையாக மரங்களை வளர்க்கும் ஒரு விசேட கலையே பொன்சாய். பொன்சாய் எனும்பொழுது இயற்கையில் குறை வளர்ச்சியுடைய தாவரங்கள் என்று அர்த்தப்படமாட்டாது. மிகவும் பெரிதாக வளரக்கூடிய மரங்களையும் குட்டையாக வளர்க்கும் நுட்பமே இது.
சிறிய இலைகள் பருமனான தண்டு குறுகலான வடிவம் கொண்ட மரங்களே பென்சாய்களாகத் தெரிவு செய்யப்படுகின்றன. மலைப் பகுதிகளில் அல்லது குன்றுகளில் காணப்படும் பாறை வெடிப்புகள் நடுவே வளரும் குட்டை மரங்கள் மற்றும் சூரிய ஒளி கிடைக்காத காரணத்தால் உயரமாக வளர முடியாத தாவரங்களை இலகுவில் அழகான பொன்சாய்களாக மாற்ற முடியும்.
பொன்சாய்களை வளர்ப்பதற்குப் பொருத்தமான அகன்ற தட்டையான கொள்கலன்கள் தேவை. அதன் ஊடகமாக சிறுகற்களைக் கொண்ட ஆற்று மணல்இ கரிஇ காய்ந்த மாட்டெருஇ செங்கற் துகள்கள் ஆகியவற்றின் கலவை பயன்படுத்தப்படுகின்றது. உரமிடுவதும் பொன்சாய் தாவரங்களுக்கு அவசியமானது.
அழகிய கவர்ச்சியான பொன்சாய்கள் சிறந்த வடிவமைப்பைக்கொண்டவை. ஒரு பொன்சாயை விதையிலிருந்தும்இ சிறிய மரத்திலிருந்தும் அல்லது தண்டிலிருந்தும் ஆரம்பிக்கலாம். சிறிய மரத்தை பொன்சாயாக மாற்றுவதற்கே இன்று பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். -

இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைத் திறமையான கத்தரிப்பு மூலமும் அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உரிய அளவுக்கு வளரவிடாது. முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும் பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை பொன்சாய் எனப்படும். ஜப்பானிய மொழியில் இது 'தட்டத் தோட்டம்' (盆栽) எனப் பொருள்படும். சீனக் கலையான 'பென்ஜிங்' என்பதும் இது போன்றதே. இதிலிருந்தே பொன்சாய்க் கலை வளர்ந்ததாகக் கூறப்படுகின்றது.
அழகுக்காக வளர்ப்பது போல் காணப்படும்இ சட்டிகளில் வளர்க்கப்பட்ட மரங்களின் உருவப் படங்கள்இ 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்தியச் சமாதிகளில் காணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து நாடோடிகளின் வண்டிகள் விதவிதமான பாத்திரங்களில் மரங்களை ஆசியா முழுதும் காவிச் சென்றதாக அறியப்படுகின்றது. இந்த மரங்கள் மருத்துவத் தேவைகளுக்கு வேண்டிய மூலப்பொருட்களை வழங்கியதாகத் தெரிகிறது.

உரிய முறையில் பராமரிக்கப்படும் பொன்சாய்கள் முழு அளவுக்கு வளரும் அவற்றைப் போன்ற தாவரங்களையொத்த ஆயுட்காலத்தைக் கொண்டிருக்க முடியும். எனினும் பொன்சாய்களுக்கு மிகுந்த பராமரிப்புத் தேவை. நன்றாகப் பராமரிக்கப்படாத பொன்சாய்கள் நீண்டகாலம் உயிர்வாழ மாட்டா.

இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வை வாழ்வது
மனத்திலும் உடலிலும் சமநிலையை ஏற்படுத்தும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது பொன்சாய் கலை - See more at: http://btoptions.lk/serendib/tamilshow.php?id=656#sthash.B86JkeLb.dpuf

மனத்திலும் உடலிலும் சமநிலையை ஏற்படுத்தும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது பொன்சாய் கலை
மனத்திலும் உடலிலும் சமநிலையை ஏற்படுத்தும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது பொன்சாய் கலை
நன்றி இணையம்
Comments
Post a Comment