Posts

Showing posts from August 30, 2010

கடலில் ஒரு சோக மீன்

Image
குழந்தை கையில் காலில் சிக்கி தோலுடன் பிதுக்கிய வாழைப்பழம் போல கொழ கொழ என்று இருக்கும். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சோகமான மூஞ்சியுடன். Sad fish அல்லது Blob fish என்று ஆங்கிலத்தில் பெயர். சோக மீன் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா அருகில் ஆழமான கடலில் வசிக்கிறது. கொஞ்சமே தசைகள், எலும்புகள் கொண்டது. அதனால் மாம்பழ ஜெல்லோவை சேர்த்து செய்தது போல இருக்கும். கடல்நீரின் அடர்த்தியை விட இந்த சோக மீனின் உடம்பின் அடர்த்தி கம்மி. நூல்நூலாக இருக்கும் தாத்தா பூச்சி காற்றில் மிதக்கும் இல்லையா. அதுபோல சோக மீன் அடர்த்தி குறைவினால் கடலுக்கடியில் தரையில் படாமல் நீரில் தன்னாலேயே மிதக்கும். நீந்தவே வேண்டாம். மிதக்கையில் ஏதாவது சாப்பிட அகப்பட்டால் வாயை மட்டும் திறந்து லபக்.சோக மூஞ்சி சுக வாழ்க்கை இன்று நாம் சோக மீனை தொடர்ந்து தூண்டில் வலை போட்டு நிறைய பிடித்துவிடுவதால் இந்த மீன் இனம் வேகமாக அருகி வருகிறதாம். சோக மீன் சோக வாழ்க்கை.