கடலில் ஒரு சோக மீன்

குழந்தை கையில் காலில் சிக்கி தோலுடன் பிதுக்கிய வாழைப்பழம் போல கொழ கொழ என்று இருக்கும். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சோகமான மூஞ்சியுடன். Sad fish அல்லது Blob fish என்று ஆங்கிலத்தில் பெயர்.

சோக மீன் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா அருகில் ஆழமான கடலில் வசிக்கிறது. கொஞ்சமே தசைகள், எலும்புகள் கொண்டது. அதனால் மாம்பழ ஜெல்லோவை சேர்த்து செய்தது போல இருக்கும்.


கடல்நீரின் அடர்த்தியை விட இந்த சோக மீனின் உடம்பின் அடர்த்தி கம்மி. நூல்நூலாக இருக்கும் தாத்தா பூச்சி காற்றில் மிதக்கும் இல்லையா. அதுபோல சோக மீன் அடர்த்தி குறைவினால் கடலுக்கடியில் தரையில் படாமல் நீரில் தன்னாலேயே மிதக்கும். நீந்தவே வேண்டாம். மிதக்கையில் ஏதாவது சாப்பிட அகப்பட்டால் வாயை மட்டும் திறந்து லபக்.சோக மூஞ்சி சுக வாழ்க்கை





இன்று நாம் சோக மீனை தொடர்ந்து தூண்டில் வலை போட்டு நிறைய பிடித்துவிடுவதால் இந்த மீன் இனம் வேகமாக அருகி வருகிறதாம்.

சோக மீன் சோக வாழ்க்கை.

Comments

  1. தகவலுக்கு நன்றி சகோதரா.... இலங்கையில் விஞ்ஞான ஆர்வலரில் நீங்களும் ஒரு முக்கியமானவர்.

    ReplyDelete
  2. நன்றி சகோதரி ம.தி.சுதா

    ReplyDelete
  3. இணைக்கிறேன் நண்பரே tamildigitalcinema

    ReplyDelete
  4. உங்கள் படைப்புகளை வரவேற்கிறேன் ..தொடரட்டும் ..
    http://www.raghuvarman.co.cc/

    ReplyDelete
  5. நன்றி நண்பரே P.RAGHUVARMAN

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா?

மரங்கொத்திப்பறவையின் நாக்கு மிகவும் நீளமாக இருப்பது ஏன் தெரியுமா?

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம்