பன்றிக்குட்டியை ஈன்ற பசு

இந்த உலகம் எமக்கு எத்தனை நம்பமுடியாத விசித்திரங்களைத்தான் தந்து கொண்டிருக்கிறது. சில விசயங்களை நாம் நம்ப மறுத்தாலும் நம்பமுடியாத நம்பித்தான் ஆக வேண்டிய சில சம்பவங்களும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு இந்தச்செய்தியும் ஒரு உதாரணம் தான். சிம்பாவேயில் மாடு ஒன்றுக்கு பன்றி பிறந்துள்ளது. நம்பமுடிகிறதா? நம்புங்கள். இந்தச்சம்பவம் தொடர்பாக zimbabwenewsonline.com இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு சிம்பாவேயை சேர்ந்த ஒரு விவசாயி தனது மாடு பன்றி வடிவில் குட்டி போட்டதைக்கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக Mr Tinos Mberi என்கின்ற அந்த விவசாயி தெரிவிக்கையில் என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. இது எப்படி சாத்தியப்பட்டது என்பது தொடர்பாக என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அச்சு அசல் அப்படியே பன்றியின் தோற்றத்துடன் காணப்படுகிறது. மூக்கு மற்றும் வாய் முழுக்க முழுக்க பன்றியே. என்னமோ மாஐிக் வித்தை போலவே எனக்கு இது தென்படுகிறது என்று தெரிவித்தார்