மரங்கொத்திப்பறவையின் நாக்கு மிகவும் நீளமாக இருப்பது ஏன் தெரியுமா?
என் மனதை கொத்திவிட்டு கூடுகட்டி குடியும் ஏறிவிட்ட மரங்கொத்தி பறவை நீ... என் மனதை கொத்தி விடு போகாதே.. . அவுஸ்திரேலியா நியூசிலாந்து மடகாஸ்கர் மற்றும் தென் - வட முனைப்பகுதிகளைத் தவிர்த்து உலகெங்கும் காணப்படும் பறவையாகும். பெரும்பாலான சிற்றினங்கள் காடுகளிலும் மரங்கள் உள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. எனினும் சில இனங்கள் மரங்களற்ற பாறைப்பகுதிகளிலும் பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. மரங்கொத்திகளில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மரங்களிலும் வாழும் பூச்சிகளே இவற்றின் முக்கிய உணவு. மரங்கொத்தி பறவைகள் வனம் மற்றும் தோட்டங்களில் உள்ள மரங்களில் கூடு அமைத்து வசித்து வருகின்றன. மரங்கொத்திக்கு சிறந்த செவிப்புலன் உண்டு . அது மரத்தில் தொத்திகொண்டவுடன் காதைவைத்துக் கேட்கும் . உள்ளே பூச்சிகள் நடமாட்டம் காதில் விழுந்தவுடன் உடனே மூக்கால் மரத்தை துளைத்து நீண்ட நாக்கால் பூச்சிகள் லபக்!. மரப் பட்டைகளின் இடுக்குகளில் காணப்படும் புழு வண்டு மற்றும் பூச்சிகளை உண்பதற்காக மரங்களை கொத்துகின்றன; தவிர மரங்களில் ஓட்டை அமைத்து அதில் தங்களுக்கான குடியிருப்புகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றன. மரங்கொத்த