ஆந்தைகளின் இராட்சியம்
.jpg)
ஆந்தைகள் ஒரு காலத்தில் நம் முன்னோர்களை ஆட்டிப்படைத்து தான் இருக்கிறது அதற்கான சான்றுகள் கீழே இந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டில் ஆந்தையின் அலறல் பயத்துக்குரியதாகவும் கெட்ட சகுனமாகவுமே கருதப்பட்டது. ஆந்தைகளின் புத்தி கூர்மைக்கு சான்றாக அத்தீனா தெய்வத்துடனும் சம்பந்தப்படுத்தப்பட்டு வந்தது. அத்தீனா கிரேக்கக் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் அறிவு தந்திரம் போர் இவற்றுக்கான கடவுள் ஆவார். இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே ஏதென்ஸ் நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது. பண்டைய எகிப்தியரின் எழுத்து வரிவடிவங்களில் 'ம்' ஒலியைக் குறிக்க ஆந்தை உருவமே பயன்பட்டது. எனினும் ஊனுண்ணியான இது உயிர்பெற்றுத் தாக்குவதைத் தடுக்க அதன் கால்கள் முறிந்த நிலையிலேயே வரைந்து வந்தார்கள். ஜப்பானியப் பண்பாட்டில் ஆந்தை இறப்பின் குறியீடாகக் கருதப்பட்டதுடன் இதனைக் காண்பதும் கெடுதியாகக் கருதப்பட்டது. ஹோபி பண்பாட்டில் இவை ...