சுறா மீன் தோல் தீய பாக்டீரியாக்களை அழிக்கும்

அதிக கேடுகளை ஏற்படுத்தும் பக்டீரியா கிருமிகளை சுறா தோல் விரட்டுவது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கிருமிகள் அதிகம் சேரும் மருத்துவமனைகளில் ஆபரேஷன் தியேட்டர் கருவி உறைகளில் சுறா தோலை பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கடலில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் கப்பல்கள், படகுகளின் அடிப்பகுதியில் சிப்பிகள், கடல்வாழ் உயிரினங்கள் அடிக்கடி ஒட்டிக்கொள்ளும். சில நேரங்களில் இவை பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். இவற்றை சாப்பிட வரும் உயிரினங்களால் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதை தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறு உயிரினங்கள் கூட அதில் ஒட்டாது என்பதால் சுறா தோலையே உறை போல போடலாம் என்று அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் பயோ மெடிக்கல் துறை பேராசிரியர் டோனி பிரெனன் கண்டுபிடித்தார். பிளாஸ்டிக் ஷீட் போல சுறா தோலை பயன்படுத்தி ஷார்க்லெட் என்ற ஷீட்களையும் அவர் உருவாக்கினார். உயிரினங்களை மட்டுமல்லாமல் பக்டீரியாவையும் விரட்டும் சக்தி, சுறா தோலுக்கு இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்ததுள்ளது. இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சி செய்ய ஷ்ரவந்தி ரெட்டி என்ற இந்திய பேராசிரியர் தலைமையில் க...