Posts

Showing posts from August 10, 2009

அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday)

அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday) அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday) மின் இயற்றி அதாவது மின்சார ஜெனரேட்டர் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மின்சாரம் என்பது வெறும் கனவாகவே இருந்திருக்கும். மின்சாரம் இல்லாத உலக வாழ்க்கையை இன்று கற்பனை செய்தும் பார்க்க இயலாது. மேற்கூறிய மின் இயற்றி மற்றும் மின் இயக்கி (Dynamo) ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்களுள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியியல் அறிஞரான மைக்கேல் ஃபாரடே மிகவும் முக்கியமானவராவார். மின்காந்தத் தூண்டல் (Electromagnetic induction) என்ற கோட்பாட்டை 1831 இல் உலகிற்கு வழங்கியவரும் இவரே. அறிவியல் உலகுக்கு இக்கோட்பாட்டினால் விளைந்த பயன்களும், நன்மைகளும் எண்ணிலடங்கா. மைக்கேல் ஃபாரடே 1791 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22 ஆம் நாள் இங்கிலாந்து நாட்டின் நியூயிங்டன் (Newington) என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை கருமார் தொழில் செய்து வந்தார். ஏழ்மையின் காரணமாக மைக்கேல் தனது 13 ஆவது வயதிலேயே செய்தித்தாள் விற்கும் தொழிலையும், புத்தகக் கட்டமைப்புப் (Book binding) பணியையும் மேற்கோள்ளவேண்டிய நிலைமைக்கு ஆளா