உலகில் உயிர்வாழ்ந்து அழிந்த பறவைகளில் சில

கி. பி. 1500 க்குப் பின்னர் நூற்றுக்கும் அதிகமானபறவை இனங்கள் அழிந்துள்ளன. அத்துடன் பறவையினங்களின் அழிவுவீதமும் அதிகரித்துச் செல்வதாகவே உள்ளது. இப்பொழுது உலகில் உயிர்வாழும் ஏறத்தாழப் பத்தாயிரம் இனப் பறவைகளில் 1200 இனங்கள் அழிவாபத்திலுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த அழிவாபத்து மிகப் பெரும்பாலும் மனிதனாலேயே ஆகும். தீவுகளில் வாழும் குறிப்பாகப்பறக்கவியலாத பறவையினங்களே அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றன பெரிய ஓக் பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில் கனடாவுக்குஅப்பாலுள்ள தீவுகளிலும் கிறீன்லாந்து ஐஸ்லாந்து நோர்வே அயர்லாந்து மற்றும்பிரித்தானியா போன்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசிச் சோடிகள்இ 1844இ ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்குஅப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன .இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. எனைய ஓக்குகளைப் போல பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப் பறவைகள் மனிதருக்கு இலக்காகக்கூடியனவாக இருந்தன.பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே...