இணையத்தில் எம்மவர்கள் பகுதியில் யாழ்தேவியின் நட்சத்திர பதிவராக நானும்
.jpg)
கடந்த ஞாயிறு தினக்குரலில் அதாவது 01 ஆகஸ்ட் ல் " இணையத்தில் எம்மவர்கள்" பகுதியில் யாழ்தேவியின் நட்சத்திர பதிவராக என்னை கௌரவிக்கும் " யாழ்தேவி இணையம்" மற்றும் தினக்குரல் பத்திரிகை க்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் முதற்கண் இன்று வரை எனது வலைப்பூவை பார்த்து குறை, நிறைவான கருத்துக்களை கூறும் அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நான் வலைப்பூ மூலமாக கூறுவது என்னவென்றால் வலைப்பூவை ரசியுங்கள் உங்கள் கருத்துகளை தயங்காமல் கூறுங்கள் உங்களுக்கு பிடித்த வலைப்பூக்கு மறக்காமல் வோடடுக்களை இடுங்கள் அதன் முலம் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். நீங்களும் ஒரு வலைப்பூவாளர்களாக மாறி உங்களுக்கு பிடித்த விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . நட்சத்திரம் என்ற அந்தஸ்து பதிவர்களை பொறுத்தவரையில் மணி மகுடம் தான். அந்த வகையில் வலைப்பூவில் வாழ்த்தியவர்களை விட பத்திரிகை பார்த்து வாழ்த்தியவர்கள் பலர். எல்லோருக்கும் நன்றிகள்.