Posts

Showing posts from July 27, 2010

நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா?

Image
நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது என்று கேட்டால் "அதுவா நிக்குது விடுங்கப்பா "என்று கூறுவோர் நம்மில் பலர். ஆனால் விஞஞானிகள் அதற்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளனர்.அதைப்பற்றிய விளக்கம் பின்வருமாறு நீர் நாரை (Flamingo)என்பது நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் கொண்ட பறவை. இப்பறவைகள் ஏன் ஒரு காலிலேயே நீண்ட நேரம் நிற்க விருப்பமுள்ளவை. விலங்குக்காட்சிச் சாலைகளுக்கு செல்லும் பலரும் கேட்கும் கேள்வி இது. ஆனாலும் இதற்கு எவரும் விளக்கமான பதில் தரவில்லை. இப்போது கரிபியன் நீர்நாரைகளை நீண்டகாலம் ஆய்வு நடத்திய அறிவியலாளர்கள் இதற்கு ஒரு விடை கண்டுபிடித்துள்ளார்கள். நீர்நாரைகள் தமது உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கே ஒரு காலில் நிற்கின்றன என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பிலடெல்பியாவின் புனித யோசப் பல்கலைக்கழகத்தின் உளவியல் வல்லுநர்கள் மத்தியூ அண்டர்சன் சேரா வில்லியம்ஸ் ஆகியோர் (பரிணாம) படி வளர்ச்சியின் நடத்தைகளை ஆய்வு செய்பவர்கள். இவர்கள் நீர்நாரைகளின் நடத்தைகளை ஆராய்ந்தார்கள். குறிப்பாக மனிதர்கள் இடக்கை வலக்கை பழக்கங்கள் கொண்டிருப்பது போல நீர்நாரைகள் தமது உடலின் எப்பகுதியை த