தவளைகள் பற்றிய அதிசய தகவல்கள்

தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சேர்ந்த ஒரு வரிசையாகும்.முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும் திரண்டு உருண்ட உடலும் விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள கொய்யடி என்னும் பாதங்களும் புறத்தே பிதுங்கி இருக்கும் கண் முழிகளும் கொண்டு வாலில்லா ஓர் இருவாழ்வி விலங்கு. சிறு குட்டைகளிலும் குளங்களிலும் காணப்படுவன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன் பெற்றுள்ளன. கண்களுக்கு அருகே நஞ்சுச் சுரபிகள் உள்ள நச்சுத்தவளை. தென் அமெரிக்காவில் வாழ்கின்றது தென் அமெரிக்காவைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன. கூடு கட்டும் தவளை இனம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது கூடு கட்டி அதன் மீது முட்டையிடும் ஒரு வகைதவளை இனமொன்றைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக இந்திய அறிவியலாளர் ஒருவர் அறிவித்துள்ளார். இத்தவளைகள் முட்டையிட்டவுடன் அவற்றை வெப்பத்தில் இருந்தும் மற்றும் வேறு விலங்கினங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் கூடுகளைக் கட்டுகின்றன என்று தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் எஸ். டி. பிஜு என்பவர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய மாநிலங்களான கேரளம் மற்றும் கருநாடகம் ஆகியவற்றிலுள்ள மேற்க...