Posts

Showing posts from July 14, 2010

சில கடல்வாழ் உயிரினங்களும் அவற்றின் தனிச் சிறப்புக்களும்

Image
சாக்குக்கணவாய் ( ஒக்டோபஸ்) சாக்குக்கணவாய் (தமிழில் பேய்க்கடம்பான்,சாக்குச்சுருளி, சிலந்திமீன்,நீராளி எனவோ அல்லது ஆங்கிலப் பெயரை ஒலிப்பெயர்த்து ஒக்டோபஸ் என்றோ அல்லது தமிழக வழக்குப்படி ஆக்டோபஸ் என்றோ வழங்கலாம்) என்னும் கடல்வாழ் விலங்கு எட்டுக்கைகள் கொண்ட எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு. சாக்குக்கணவாய் என்னும் இவ்விலங்கு மெல்லுடலிகள்(Mollusca)என்னும் தொகுப்பில் இதலைக்காலிகள்(cephalopod)என்னும் வகுப்பில் எட்டுக்காலிகள் அல்லது (Octopoda) எண்காலிகள் என்னும் உயிரின வரிசையில் உள்ள ஒரு விலங்கு. தலைக்காலிகள் (cephalopod)என்னும் வகுப்பில் 300 வகையான சாக்குக்கணவாய் உள்ளன என்று கண்டிருக்கின்றார்கள்.இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். சாக்குக்கணவாய் உடலில் எலும்பு இல்லாததா ல் மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவர இயலும். இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. கணவாய்க்கு மூன்று இதயங்கள்உண்டு . கணவாயின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். கணவாய் இரத்தத்தில் செப்பு உள்ளஈமோசயனின் (hemocyanin) என்னும் புரதப்பொருள் உள்ளதால் உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக ம