சில கடல்வாழ் உயிரினங்களும் அவற்றின் தனிச் சிறப்புக்களும்
சாக்குக்கணவாய் ( ஒக்டோபஸ்)

சாக்குக்கணவாய் (தமிழில் பேய்க்கடம்பான்,சாக்குச்சுருளி, சிலந்திமீன்,நீராளி எனவோ அல்லது ஆங்கிலப் பெயரை ஒலிப்பெயர்த்து ஒக்டோபஸ் என்றோ அல்லது தமிழக வழக்குப்படி ஆக்டோபஸ் என்றோ வழங்கலாம்) என்னும் கடல்வாழ் விலங்கு எட்டுக்கைகள் கொண்ட எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு. சாக்குக்கணவாய் என்னும் இவ்விலங்கு மெல்லுடலிகள்(Mollusca)என்னும் தொகுப்பில் இதலைக்காலிகள்(cephalopod)என்னும் வகுப்பில் எட்டுக்காலிகள் அல்லது (Octopoda) எண்காலிகள் என்னும் உயிரின வரிசையில் உள்ள ஒரு விலங்கு. தலைக்காலிகள் (cephalopod)என்னும் வகுப்பில் 300 வகையான சாக்குக்கணவாய் உள்ளன என்று கண்டிருக்கின்றார்கள்.இவை மொத்த
தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
சாக்குக்கணவாய் உடலில் எலும்பு இல்லாததால் மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவர இயலும். இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. கணவாய்க்கு மூன்று இதயங்கள்உண்டு. கணவாயின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். கணவாய் இரத்தத்தில் செப்பு உள்ளஈமோசயனின் (hemocyanin) என்னும் புரதப்பொருள் உள்ளதால் உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்). சாக்குக்கணவாயின் இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின்செதிள் அல்லது பூ (அல்லது இணாட்டு ) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இரைக்கப் பயன் படுகின்றது. மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப் பயன்படுகின்றது.முதுகெலும்பிகளில் உள்ள இரத்தத்தில்சிவப்பணுவில் உள்ள ஈமோகுளோபின்என்னும் இரும்புச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல சிறந்தது என்றாலும் குளிரான கடல் பகுதிகளில்இ ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில் ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக உள்ளது.
சாக்குக்கணவாய்கள் அதிக காலம் வாழ்வதில்லை. பெரும்பாலும் சில மாதங்களே வாழ்கின்றன. வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்ப்பெரிய சாக்குக்கணவாய்கள் 4-5 ஆண்டுகள் வாழலாம். இனப்பெருக்கத்திற்கான புணர்ந்தபின் ஆண் சாக்குக்கணவாய்கள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன. பெண் சாக்குக்கணவாய்கள் முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன.
பவளப் படிப்பாறை
பவளப் படிப்பாறை என்பது பவளங்களின்வன்கூடுகள் ஒன்றன்மேல் ஒன்று படிந்து உருவாகும் அமைப்பு ஆகும். இவை ஒளிபுகக் கூடிய வெப்ப வலயக் கடற் பகுதிகளில் வளர்கின்றன
இப் பகுதிகள் படிப்பாறைகளை அடித்துச் செல்லாத அளவுக்கு மென்மையானதும் போதிய அளவு உணவும் ஒட்சிசனும் கிடைக்கக்கூடிய அளவுக்குக் கடல்நீரைக் கலக்கிவிடக்கூடிய அளவு வலுவானதுமான அலை இயக்கம் கொண்டவையாக இருத்தல் வேண்டும். இவற்றின் வளர்ச்சிக்கு ஊட்டம் குறைந்த தெளிந்த மிதவெப்பம் கொண்ட ஆழம் குறைந்த நீர்ப் பகுதி அவசியம். இவ் வன்கூடுகள் உயிர்ப்புள்ளவையாக இருக்கும்போது அவற்றுள் பவள மொட்டுக்கள்(coral polyps)இருக்கும்.
டால்பின் (Dolphin)

தமிழில் ஓங்கில் அல்லது கடற்பன்றி ஆங்கிலத்தில் (Dolphin) டால்பின் என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி ஆகும். இவை திமிங்கலங்களுக்குநெருக்கமான இனத்தைச் சேர்ந்தவை. பதினேழு வகையானபேரினங்களில் சுமார் நாற்பது வகையான ஓங்கில் இனங்கள்உள்ளன. ஓங்கில்களின் உடல் திமிங்கலம் போல் இழைவரிவமுடையது.வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது. அதன் நுனி கூர்மையாய் விளிம்பில் சுழியுடையதாய் இருக்கின்றது. ஓங்கில்கள் 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் நீளம் வரை உள்ளன. இவை 40 கிலோகிராம் எடையில் இருந்து 10 டன் எடை வரை உள்ளன. டால்பின்கள்ஊனுண்ணிகள் ஆகும். இவைமீன்களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சிறப்பாக கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம். ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில்ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால்பன்னாட்டு ஓங்கில் (டால்பின்) ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளது
ஒவ்வொரு டால்பினும் தனித்துவமான சீட்டி (சீழ்க்கை) ஒலியை எழுப்புகின்றன. இவை மனிதர்களின் கை இரேகையைப் போல் ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்தன்மையானவை
திமிங்கிலம்

திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன
இவை வெப்ப இரத்த விலங்குகள். தம் குட்டிகளுக்கு முலைப்பால் ஊட்டுகின்றன. உடலில் கொஞ்சம் மயிரினைக் கொண்டுள்ளன. இவற்றின் தோலின் உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல்வெப்பத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கும் மனிதனைப் போன்றே இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன. இத்துளைபலீன் திமிங்கிலங்களுக்கு இரண்டும் பற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது. திமிங்கிலங்கள் தனித்தன்மை வாய்ந்த சுவாச மண்டத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால் மூச்சுவிடாமல் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கவியலும். இசுப்பெர்ம் திமிங்கலம் எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலத்தால் இரண்டு மணிநேரம் நீருக்குள் மூச்சடக்கி இருக்க முடியும்
ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் முறையாகும்.
(Cetacea) கடற்பாலூட்டி

கடற்பாலூட்டி (Cetacea) என்பது திமிங்கிலங்கள் கடற்பசுக்கள் கடற்பன்றிகள் போன்ற பாலூட்டிவகையைச் சேர்ந்த கடல்வாழ் உயிரின வகையைச் சேர்ந்த ஒரு விலங்கைக் குறிக்கும்.கடற்பாலூட்டிகள் நீர் வாழ்வுக்கு இசைவாக்கம்பெற்ற பாலூட்டிகள் ஆகும். இவை இருமுனையும் கூம்பிய உடலமைப்புக் கொண்டவை. முன் கால்கள் நீந்துவதற்கு ஏற்ற வகையில் துடுப்புக்கள் போல் மாற்றம் பெற்றுள்ளன. பின்னங் கால்கள் குறுகி உறுப்பெச்சங்களாகக் காணப்படும். இக் கால்கள் முதுகெலும்புடன் இணைக்கப்படாமல் உடலுக்குள்ளேயே காணப்படுகின்றன. இவற்றில் உடலில் பெரும்பாலும் உரோமங்கள் இருப்பதில்லை. ஆனால் இவற்றில் உடல் தடிப்பான தோலயற்கொழுப்புப் படையினால் காக்கப்படுகின்றது. இவ்விலங்குகள் பொதுவாகப்புத்திக்கூர்மை கொண்டவை எனக் கருதப்படுகின்றன
அரியதகவல் அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்
ReplyDeleteஈகரை வாயிலாக உங்களது தளம் கண்டேன் ஆனந்தம் நன்றி
http://hafehaseem00.blogspot.com/
பல அரியதகவல்களை அருமையாக தொகுத்துத்தருகிறீர்கள்
ReplyDeleteஉங்கள் பணி தொடர என் வாழ்த்துகள்.
அருமை
ReplyDeleteவாழ்த்துகள்