சில பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

இது பழங்கள் பற்றிய சில சுவையான தகவலாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். ஆப்பிள் அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகைக்குபின் ஆப்பிள் பிரபலமடைந்தது.ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும் சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் மரம் சிறிய இலையுதிர் மரமாகும். சுமார் 5 - 12 மீ உயரம் வரை வளரக்கூடியதுடன். ஆப்பிள் என்ற சொல் பழைய ஆங்கில சொல்லான aeppel (பொருள்: உருண்டை) என்ற சொல்லிலிருந்து வந்தது. பயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 இரகங்கள் உள்ளன. அறுவடைமுற்றிய மரங்களில் ஆண்டுக்கு சுமார் 100 - 200 கிலோகிராம் ஆப்பிள்கள் விளையும். ஆப்பிள்மருத்துவ குணங்கள் தினம் ஓர் ஆப்பி மருத்துவரைத் தூர வைக்கும் (An apple a day keeps the doctor away) என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி நெடுங்காலமாக ஆப்பிள்கள் உடல்நலத்திற்கு மிக நல்லதாகக் கருதப்பட்டன. தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள் எடைக்குறைவு கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் ...