Posts

Showing posts from May, 2011

பௌர்ணமி தினத்தில் தேள்களில் எவ்வாறு ஒளி வீசுகின்றது.

Image
இருண்ட சூழ்நிலையில் தேள்களிலிருந்து புற ஊதாக் கதிர்வீச்சுகள் ஒளிர்ந்தால் பார்ப்பவரை திகிலடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. பூரண பௌர்ணமி தினங்களில் இயற்கைக்கு மாறான வகையில் நியோன் நீல நிற கதிர்கள் தேள்களின் உடற்பாகங்களிலீருந்து ஒளிர்கின்றன. தேள்களின் எலும்புப் பகுதிகளில் புரதப் பொருளின் மீது புற ஊதாக் கதிர்கள் தாக்கமுறுவதனால் இவ்வாறு மனிதக் கண்களுக்கு அவை ஒளி வீசுவதாக் தோன்றுகின்றது. தேள்கள் தொடர்பான ஆய்வாளர்கள் இந்த வினாவிற்கு விடைகாண நீண்ட காலத்தை செலவிட்டனர். ஏனைய தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக ஒரு சாராரும், பாலைவனங்களில் தேள்களை இனம் காண்பதற்கு இவ்வாறு ஒளிர்வதாக மற்றொரு சாராரும் தெரிவிக்கின்றனர். இரையை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு ஒளிர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக இந்த ஒளிமாற்றச் செயற்பாடு நிகழ்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வாறெனினும், தீவிர ஆய்வுகளின் போது மேற்குறிப்பட்ட எந்தவொரு காரணியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. தேள்கள் எவ்வாறு ஒளிர்கின்றன என்பது தொடர்பில் கலிபோர்

யானை இனத்தைச் சேர்ந்த விசித்திர விலங்கினம்

Image
இந்து சமுத்திரம் பசிபிக் சமுத்திரம் செங்கடல் உட்பட கிழக்கு ஆபிரிக்கா முதல் அவுஸ்திரேலியா வரையான கரையோர நீர்பரப்பில் டியுகோங்ஸ் விலங்கினங்கள் வாழ்கின்றன. இவற்றின் தோற்றம் மற்றும் நடத்தைகள் ஒன்றோடொன்று ஒத்தவையாக காணப்பட்ட போதிலும் டியுகோங்கிஸின் வாற் பகுதி திமிங்கிலத்தைப் போன்றது. இவ்விரண்டும் யானை இனத்தைச் சார்ந்தவை. எனினும் இவ்வாறான மிகப்பெரிய மிருகங்கள் தோற்றத்திலும் நடத்தையிலும் ஒத்தவையாக இருப்பதில்லை. நீருக்கடியிலுள்ள புல்லினத்தை பகலும் இரவுமாக இவை மேய்கின்றன. தமது உடலிலுள் தூரிகைகளால் இவற்றை கிளறிவிடுகின்றன. இவை தமது மென்மையான மூக்கினாலும் கரடுமுரடான உதடுகளினாலும் மென்று சாப்பிடுகின்றன. இந்த முலையூட்டிகள் முன்னர் சுமார் ஆறு நிமிடங்கள் நீருக்கடியில் மூழ்கி இருக்க கூடியவை. சில நேரங்களில் இவை நின்றவாறு நீருக்கு மேல் தலையை வைத்துக்கொண்டு வால்களினால் மூச்செடுக்கின்றன. இந்த வகையான விலங்கினங்கள் தமது பொழுதுகளை அதிகளவில் தனிமையாக அல்லது ஜோடியுடன் கழிக்கின்றன. இருப்பினும் சில வேளைகளில் நூற்றுக்கணக்கான விலங்கினங்களுடன் மந்தையாகவும் காணப்படுகின்றன. ஒரு வருட கால பிரசவத்துக்கு பின்னர் பெண் டிய