Posts

Showing posts from August, 2010

கடலில் ஒரு சோக மீன்

Image
குழந்தை கையில் காலில் சிக்கி தோலுடன் பிதுக்கிய வாழைப்பழம் போல கொழ கொழ என்று இருக்கும். எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் சோகமான மூஞ்சியுடன். Sad fish அல்லது Blob fish என்று ஆங்கிலத்தில் பெயர். சோக மீன் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா அருகில் ஆழமான கடலில் வசிக்கிறது. கொஞ்சமே தசைகள், எலும்புகள் கொண்டது. அதனால் மாம்பழ ஜெல்லோவை சேர்த்து செய்தது போல இருக்கும். கடல்நீரின் அடர்த்தியை விட இந்த சோக மீனின் உடம்பின் அடர்த்தி கம்மி. நூல்நூலாக இருக்கும் தாத்தா பூச்சி காற்றில் மிதக்கும் இல்லையா. அதுபோல சோக மீன் அடர்த்தி குறைவினால் கடலுக்கடியில் தரையில் படாமல் நீரில் தன்னாலேயே மிதக்கும். நீந்தவே வேண்டாம். மிதக்கையில் ஏதாவது சாப்பிட அகப்பட்டால் வாயை மட்டும் திறந்து லபக்.சோக மூஞ்சி சுக வாழ்க்கை இன்று நாம் சோக மீனை தொடர்ந்து தூண்டில் வலை போட்டு நிறைய பிடித்துவிடுவதால் இந்த மீன் இனம் வேகமாக அருகி வருகிறதாம். சோக மீன் சோக வாழ்க்கை.

உலகத்தின் உயர்ந்த பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம்

Image
World 's Highest Bridge in France மில்லோ (Millau Viaduct) என்னும் பாலம் தென் பிரான்சிலே உள்ள வியப்பூட்டும் பொறியியல் சாதனை படைத்த வான் வீதி என அழைக்கும் மிகு உயர் பாலம். இப்பாலம் டார்ன் ஆற்றுப் பள்ளத்தாக்கைக் கடக்க ( 1.6 மைல்) 2460 மீட்டர் நீளமுடைய பாலம். டிசம்பர் 14 2004ல் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது . பிரான்சின் இரும்புவடத் தொங்கு பாலம்ஏழு கம்பங்கள் தாங்கி நிற்கும் 1.6 மைல் 2460 மீட்டர் நீளமான வான்வீதிப் பாலம் பிரான்சின் தெற்குப் பகுதியில் மாஸ்ஸிப் மைய மலைப் பிரதேசப் பள்ளத்தாக்கில் (Massif Central Mountains) 886 அடி 270 மீட்டர் உயரத்தில் படுத்திருக்கும் வானவில் போல காட்சி அளிக்கிறது! இந்த வான்வீதியில் மோட்டர் பயணம் செய்வதால் 60 மைல் (100 கி.மீ) பயண தூரம் குறைவதோடு 4 மணிப் பயண நேரமும் சேமிப்பாகிறது! ஏழு தீக்குச்சிக் கம்பங்களில் எல்லாவற்றுக்கும் பெரிய கம்பம் 1125 அடி 343 மீட்டர் உயரத்தில் ஐஃபெல் கோபுரத்தை விட 62 அடி மிகையாகப் பூமியில் ஊன்றப் பட்டுள்ளது ஒரு மகத்தானப் பொறியியல் சாதனையே! மெலிந்த, எளிதான, மென்மையான மில்லா வான்வீதிப் பாலத்தைப் படைத்தவர், பிரிட்டிஷ் கட்டமை

உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்

Image
டிரிஃப்ட் பாலம் ( Trift Bridge ) என்பது பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம் ஆகும். இது சுவிட்சர்லாந்தில் உள்ளது. இதன் மொத்த நீளம் 170 மீட்டர் (560 அடி) உயரம் 100 மீட்டர்கள் (330 அடி) ஆகும்.டிரிஃப்ட் கயிற்றுப் பாலம் சுவிட்சர்லாந்தின் காட்மென் என்ற இடத்தில் டிரிஃப்ட்சீ என்ற ஆற்றிற்குக் குறுக்கே அமைந்துள்ளது.இங்கு ஆண்டு தோறும் 20000 இற்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர். தற்போதைய புதிய பாலம் 2009 ஜூன் 12 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. ஆறு வாரங்களில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. டிரிஃப்ட் பாலத்தை கடத்து செல்லும் போது பிடிக்கப்பட்ட வீடியோ படம்

உலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை

Image
அந்தரத்தில் பறந்துகொண்டே ஓரிடத்தில் உலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை Bee Hummingbird சுண்டு ஓசனிச்சிட்டு ஆகும் .ஓசனிச்சிட்டுகள் என்னும் மிகச் சிறிய பறவைகள் சிறகடித்துக் கொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை. இவ்வினப் பறவைகள் வட தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இப்பேரினத்தில் 320 வகையான ஓசனிச்சிட்டு வகைகள் உள்ளன.கியூபாவில் வாழும் ஓசனிச்சிட்டுகள் ஆகிய இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் மட்டுமே கொண்டுள்ளது கியூபாவில் வாழும் சுண்டு ஓசனிச்சிட்டுகள் ஆகிய இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் மட்டுமே கொண்டுள்ளது. மயில்கழுத்து நிறக் கன்ன ஓசனிச்சிட்டு இப்பறவைகளின் புகழ்பெற்ற சிறப்பியல்புகளின் ஒன்று இது அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து தேன் உண்ணுவது. இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிப்பதால் 'உசுஉசு ' என்று எழும் ஒலியால் இதற்கு ஓசனிச்சிட்டு என்று பெயர். ஓசனித்தல் என்றால் பறவைகளின் இறக்கைகள் விரைந்து அடிக்கும் பொழுது எழும் ஒலி என்று பொருள். அந்தரத்தில் ஓரிடத்திலேயே பறந்துகொண்டே நிற்பது மட்டுமல்லாமல்

உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள்

Image
1 வது நெதர்லாந்து Netherlands 1 வது நெதர்லாந்து Netherlands உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் நாடு நெதர்லாந்து ஆகும். சராசரியான உயரம் 6'0"ஆகும். இதனால் டச்சு அரசாங்கம் கட்டிட தினைக்களுங்களுக்கு புதிய அறிக்கையில் கதவுகளுக்கான உயரம் கட்டாயம் 6 அடிக்கு மேல் இருத்தல் வேண்டும் என்று கட்டாய நிபந்தனை போடப்பட்டுள்ளது. 2 வது சுவிடன் Sweden 2 வது சுவிடன் Sweden சராசரியான உயரம் 5'11."'.ஆகும் 3 வது டென்மார்க் Denmark 3 வது டென்மார்க் Denmark சராசரியான உயரம் 5'11.1" ஆகும் 4 வது Norway நோர்வே 4 வது Norway நோர்வே சராசரியான உயரம் 5'10.7"ஆகும். 5 வது Estonia எஸ்ரேனியா 5 வது Estonia எஸ்ரேனியா சராசரியான உயரம் 5'10.5"ஆகும் 6 வது Finland பின்லாந்து 6 வது Finland பின்லாந்து சராசரியான உயரம் 5'10.2"ஆகும். 7 வது Germany ஜேர்மன் 7 வது Germany ஜேர்மன் சராசரியான உயரம் 5'10.1"ஆகும். 8 வது Greece கிரேக்கம் 8 வது Greece கிரேக்கம் சராசரியான உயரம் 5'10.1". ஆகும். 9 வது USA அமெரிக்கா 9 வது USA அமெரிக்கா அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின

பச்சோந்தி நிறம் மாறும் விதம்

நிறங்கள் என்றால் இயற்கையும் கூட வரும் நேசம் என்றால் செயற்கையும் கூட வருமா நிறம் மாறுவதால் அது நேசமா? மாறாதிருக்க அது போடுவது வேஷமா? Impressive Chameleon - watch more funny videos பச்சோந்தி ஊர்வன பிரிவைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். பச்சோந்திகள் அவற்றின் மனநிலை வெப்பம்இ ஒளி ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் தோலின் நிறத்தை மாற்றவல்லவை. பச்சோந்தி தான் இருக்கும் இடத்திற்க்கு ஏற்றாற்போல் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தது. இதற்கு காரணம் அதன் தோலில் உள்ள நிற செல்களுக்கும் அதன் மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருக்கிறது . பச்சோந்திக்கு காக்கை கழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. பச்சோந்தி தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது. நேரத்திற்கு ஏற்றாற்போல் உன்னை மாற்றும் மானிடா பச்சோந்தி- நிறம் மாறும் தன் பார்வைக்கேற்ப உன்னைப்போல் உருமாறுவதில்லை உன் வேட்கை தணிக்க நிறம் கொண்டு மனம் மாறும் நீ ம

பண்டைய கிரேக்கக் கடவுளான பன்னிரு ஒலிம்பியர்கள்

Image
பண்டைய கிரேக்கக் கடவுளான பன்னிரு ஒலிம்பியர்களை பற்றிய பதிவு ஆகும் ஆர்ட்டெமிஸ் ஆர்ட்டெமிஸ் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு முதன்மையான பெண் கடவுள் ஆவார். இவர் ஜூஸ் மற்றும் லீட்டோ ஆகியோரின் மகள். மேலும் இவரும் அப்போலோவும் இரட்டையர்கள். பிறப்பு அறுவடை இயற்கை ஆகியவற்றின் கடவுள ஆவார். இளம்பெண்களைக் காப்பவராகவும் இவர் விளங்குகிறார் . இவர் கைகளில் வில்- அம்பு ஏந்திக் காணப்படுவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் டயானா. ஹெஸ்டியா ஹெஸ்டியா பண்டைய கிரேக்கத் தொல்கதைகளில் வரும் பெண் கடவுள் ஆவார். இவர் ஹார்த் என்று அழைக்கப்படும் செங்கல் அல்லது கல்லால் ஆன அடுப்பிற்கு கடவுள் ஆவார். ஒவ்வோர் வீட்டிலும் உள்ள ஹார்த் இவரது உறைவிடமாகும். மேலும் நகர்மண்டபத்திலும் ஓர் அடுப்பு இருக்கும். அதுவும் இவரது உறைவிடம் ஆகும். பொதுவாக பண்டைய கிரேக்கர்கள் புதிய குடியேற்றங்களை அமைக்கும் போது இங்கிருந்து நெருப்பை எடுத்துச் சென்று புது இடத்தில் வைப்பர் . சூசு சூசு கிரேக்கத் தொல்கதைகளின் படி கடவுள்களின் அரசன் ஆவார். இவர் ஒலிம்ப்பஸ் மலையை ஆள்பவர். வானம் மற்றும் இடி ஆகியவற்றின் கடவுள். இவருடைய சின்னங்கள் இடி கழுகு காளை மற்றும் ஓ

உலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம்

Image
அரளி என்னும் ஒலியாண்டர் Nerium oleander என்னும் தாவரம் உலகத்திலேயே மிகக்கொடுமையான நச்சுத் தாவரமாக கருதப்படுகிறது .தாவரத்தின் எல்லா பாகங்களும் நஞ்சுதான். பலவகையான நஞ்சுகளும் இந்த தாவரத்தில் காணப்படுகின்றன. இதில் காணப்படும் oleandrin மற்றும் neriine நச்சுக்கள் இதயத்தை பாதிக்கக்கூடியவை. தேனீக்களால் ஒலியாண்டர் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேனை நக்கிய மாத்திரத்திலேயே மரணம் சம்பவிக்கும். ஒலியாண்டர் தாவரத்தின் பூக்கள் அழகானவை. ஆனால் அழகைப்பார்த்து ஏமாந்து போய்விடாதீர்கள். அத்தனையும் நஞ்சு. கொடுமையான நச்சுத்தன்மை இருந்தாலும்கூட அழகிற்காக இந்தத் தாவரம் வளர்க்கப்படுகிறது . தூரக்கிழக்கு நாடுகளில் இருந்தும் மத்தியதரைக்கடல் நாடுகளில் இருந்தும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட இந்த தாவரம் உலர்ந்த வெப்ப நிலைகளிலும் வளம்குறைந்த மண்ணிலும் வளரக்கூடியது. அடர்த்தியான புதர்வடிவில் ஆறுமுதல் பதினெட்டு அடி உயரத்திற்கு ஒலியாண்டர் தாவரம் வளரும். இலைகள் அடர் பச்சை நிறத்திலும் தடிமனாகவும் இருக்கும். கொத்தாகப் பூக்கும் பூக்கள் மஞ்சள் சிகப்பு இளஞ்சிவப்பு வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படும். வறண்ட நிலத்தில் கூட ஒ