உலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை

அந்தரத்தில் பறந்துகொண்டே ஓரிடத்தில்
உலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை
Bee Hummingbird
சுண்டு ஓசனிச்சிட்டு ஆகும்.ஓசனிச்சிட்டுகள் என்னும் மிகச் சிறிய பறவைகள் சிறகடித்துக் கொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை. இவ்வினப் பறவைகள் வட தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இப்பேரினத்தில் 320 வகையான ஓசனிச்சிட்டு வகைகள் உள்ளன.கியூபாவில் வாழும் ஓசனிச்சிட்டுகள் ஆகிய இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் மட்டுமே கொண்டுள்ளது

கியூபாவில் வாழும் சுண்டு ஓசனிச்சிட்டுகள் ஆகிய இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் மட்டுமே கொண்டுள்ளது.




மயில்கழுத்து நிறக் கன்ன ஓசனிச்சிட்டு
இப்பறவைகளின் புகழ்பெற்ற சிறப்பியல்புகளின் ஒன்று இது அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து தேன் உண்ணுவது. இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிப்பதால் 'உசுஉசு ' என்று எழும் ஒலியால் இதற்கு ஓசனிச்சிட்டு என்று பெயர். ஓசனித்தல் என்றால் பறவைகளின் இறக்கைகள் விரைந்து அடிக்கும் பொழுது எழும் ஒலி என்று பொருள். அந்தரத்தில் ஓரிடத்திலேயே பறந்துகொண்டே நிற்பது மட்டுமல்லாமல் இது பறந்துகொண்டே பின்னோக்கியும் நகரவல்லது; நெட்டாக நேர் செங்குத்தாக மேலெழுந்து பறந்து நகரவும் வல்லது. இப்பறவைகளின் உணவில் பூந்தேனும் சிறு பூச்சிகளும் முக்கியமானவை. உடல் வளர்ச்சிக்குத்தேவையான புரதச் சத்து பூச்சிகளை உண்பதால் பெறுகின்றன.

ஓசினிச்சிட்டின் குஞ்சுகள்
உலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகச் சிறிய கூடு ஓசனிச்சிட்டு பறவையின் கூடாகும். இதனுடைய கூட்டின் ஆழம் மிகக்குடியது 3 செ.மீ விட்டமுடையது. இது மே -யூன் காலப்பகுதியில் குஞ்சு பொரிக்கும் காலமாகும்.

சிறிய பறவைகளாகிய ஓசனிச்சிட்டுகளுக்கு நீளமான மெல்லிய குத்தூசி போன்ற அலகுகள் உள்ளன. நீளமான மெல்லிய அலகுகள் இருப்பது இப்பறவை இனத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று. இப்பறவையின் பிளவுபட்ட இரட்டை நாக்கு அலகுகளுக்கு வெளியேயும் நீண்டு பூவின் அடியே இருந்து பூந்தேன் உண்ண வசதியாக படிவளர்ச்சி அடைந்துள்ளது. நாக்கு குழல்போல் உருண்டு தேனுண்ன ஏதுவாக அமைந்துள்ளது. ஓசனிச்சிட்டுகளின் கீழ் அலகு பூச்சிகளைப் பிடிக்க வசதியாக விரிந்து கொடுக்கக்கூடியது.

தேனீயுடன் அளவை ஒப்பிடுமாறு நிற்கும் ஓசனிச்சிட்டு
பெரும்பாலான ஓசனிச்சிட்டுகள் கண்ணைக் கவரும் பளபளப்பாக ஒளிரும் நிறங்கள் கொண்ட தோற்றம் கொண்டவை. ஆண்-பெண் பறவைகளின் தோற்றங்கள் வெகுவாக மாறுதலாக இருக்கும் ஈருருப் பண்பு கொண்டவை. பெரும்பாலும் ஆண் பறவைகள் அழகான நிறம் கொண்டிருக்கும். பெண்பறவைகள் அப்படி இருக்காது ஆனால் இருபால் பறவைகளுக்கும் ஒளிரும் நிறங்கள் காணப்படும்.

ஓசனிச்சிட்டுகள் இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன. பூக்களில் இனியம் (சர்க்கரைப் பொருள்) 12% க்கு குறைவாக இருந்தால் அதிகம் நாடுவதில்லை. இனியம் 25% இருக்கும் பூக்களை அதிகம் நாடுகின்றன. பூந்தேனில் இனியம் இருந்த பொழுதும் பறவைகளுக்குத் தேவையான புரதச் சத்து அமினோக் காடிகள் உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்) கனிமப் பொருட் சத்துகள் கிடைப்பதில்லை. இதற்காகத் தேனுண்னும் பொழுது அதில் இருக்கும் பூச்சிகளையும் சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்தும் உண்ணும் திறன் கொண்டது இப்பறவை. ஓசனிச்சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான பூந்தூள் சேர்க்கை (மகரந்த சேர்க்கை) நிகழ்கின்றது

Comments

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்