Posts

Showing posts from August 12, 2010

மிக பிரபலியமான போர்க் கப்பல்கள்

Image
உலக வரலாற்றில் போர்க் கப்பல்களின் பங்கு இன்றி அமையாத ஒன்றாகும். அதற்கான காரணம் அந்த அந்த நாடுகளின் பலத்தினை உயர்த்துவதுக்கு போர்க் கப்பல்களின் பங்கும் ஒன்றாகும்.அவைகளின் சில போர்க் கப்பல்களின் விபரம் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz (CVN-68)) உலகில் உள்ள மிகப் பிரமாண்டமான அணு சக்தி போர்க் கப்பல்களில் ஒன்று. 1975 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கிய இந்தக் கப்பல் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட கப்பல் ஆகும். இந்தக் கப்பலில் 75 விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் இந்தக் கப்பல் பயணிக்கும். கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஈராக் போரின்போது இந்தக் கப்பலிலிருந்துதான் அமெரிக்க விமானங்கள் ஈராக்கைத் தாக்கி வந்தன. இந்தக் கப்பலில் 2 அணு உலைகள் உள்ளன. அணு சக்தியின் மூலம் இந்தக் கப்பல் இயங்குகிறது. இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம் 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம்இ ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம் ஹெலிகாப்டர் ஆகியவையு