மிக பிரபலியமான போர்க் கப்பல்கள்

உலக வரலாற்றில் போர்க் கப்பல்களின் பங்கு இன்றி அமையாத ஒன்றாகும். அதற்கான காரணம் அந்த அந்த நாடுகளின் பலத்தினை உயர்த்துவதுக்கு போர்க் கப்பல்களின் பங்கும் ஒன்றாகும்.அவைகளின் சில போர்க் கப்பல்களின் விபரம்

யுஎஸ்எஸ் நிமிட்ஸ்
யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz (CVN-68)) உலகில் உள்ள மிகப் பிரமாண்டமான அணு சக்தி போர்க் கப்பல்களில் ஒன்று. 1975 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கிய இந்தக் கப்பல் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட கப்பல் ஆகும்.
இந்தக் கப்பலில் 75 விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் இந்தக் கப்பல் பயணிக்கும். கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஈராக் போரின்போது இந்தக் கப்பலிலிருந்துதான் அமெரிக்க விமானங்கள் ஈராக்கைத் தாக்கி வந்தன. இந்தக் கப்பலில் 2 அணு உலைகள் உள்ளன. அணு சக்தியின் மூலம் இந்தக் கப்பல் இயங்குகிறது.

இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம் 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம்இ ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம் ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அளவுக்கு வசதி உள்ளது.
2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் சாதனை புரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸ் பெயர் இந்த கப்ப லுக்கு சூட்டப்பட்டது

எம்டன்
எம்டன் ஜெர்மனிப் போர்க்கப்பல் (German cruiser Emden) ஜெர்மன் இலகு வகைப் போர்க்கப்பல் பல வியத்தகு போர்ச்செயல்களை புரிந்து சாதனைப்படைத்த ஒன்றாகும். முதலாம் உலகப்போரின் முடிவிற்குப்பின் ஜெர்மானியால் நிர்மானிக்கப்பட்ட எம்டன் கப்பல்களில் மூன்றாவது போர்க்கப்பலே இந்த எம்டன். இறுதியாக ஜனவரி 6 1925 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்டோபர் 15 1925 ல் போர்களில் பயன்படுத்தப்பட்டது. சோதனை முயற்சியாக எம்டன் அட்லாண்டிக் பசிபிக் மற்றும் மத்தியத்தரைக் கடல் பகுதிகளில் 1926 முதல் 1939 வரை பயன்படுத்தப்பட்டது
ஓஸ்லோவில் நடந்த போரில் பங்குப்பெற்று பெரிய கப்பல்களான புலுச்சர் ஆஸ்கார்பர்க் கப்பல்களை மூழ்கச்செய்தது.
ஜெர்மன் முன்னாள் அதிபர் பால் வோன் இன்டன்பெர்க்கினுடைய இறப்பிற்குப்பின் அவர் உடலை சுமந்து வந்தப் பெருமை இக்கப்பலுக்குண்டு. ஏப்ரல் 9 1945 முதல் ஏப்ரல் 10 1945 ஒரே இரவில் ஜெர்மனியின் கீல் பகுதியில் அடைந்த பலத்த வான்தாக்குதலில் மிகுந்த சேதத்திற்குள்ளானது. ஏப்ரல் 25 1945 ல் படைப்பிரிவில் இருந்து விலக்கப்பட்டு மே 3 ல் துண்டுதுண்டாக சிதைக்கப்பட்டது.

துவக்கம்: டிசம்பர் 1921

வெளியீடு: ஜனவரி 6 1925

பணியமர்த்தம்: அக்டோபர் 15 1925

பணி நிறுத்தம்: ஏப்ரல் 26 1945

லா குளோய்ரே
பிரான்ஸ் கடற்படையின் லா குளோய்ரே உலகின் முதலாவது இரும்புத்தகடு போர்த்திய போர்க்கப்பல் ஆகும். இது கிரீமியன் போரைத் தொடர்ந்து சுடுகலன்கள் தொடர்பிலான புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. விழுந்து வெடிக்கும் எறிகணைகளைப் பயன்படுத்திய பைக்ஸ்ஹான்ஸ் மற்றும் சுழல் துப்பாக்கிகள் (Rifles) மரக் கப்பல்களுக்குப் பலத்த சேதத்தை உண்டாக்கின. இக் கப்பல் பிரான்சின் கப்பல் வடிவமைப்புக்கலை வல்லுனரான (Dupuy de Lôme)டூப்பூய் டி லோமே என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

அக்காலத்தில் பழைய மரக்கப்பல்களுடன் லா குளோரே நடத்திய போர்கள் செம்மறியாடுகளுக்கு நடுவே ஓநாய் நடத்திய தாக்குதலுக்கு ஒப்பிடப்பட்டது.

கட்டியோர்: தூலோன் பிரான்ஸ்

துவக்கம்: ஏப்ரல் 1858

வெளியீடு: 24 நவம்பர் 1859

பணியமர்த்தம்: ஆகஸ்ட் 1860

பணி நிறுத்தம்: 1879

எச்.எம்.எசு சலஞ்சர்
எச்.எம்.எசு சலஞ்சர் (HMS Challenger (1858) (1858)) என்னும் நீராவியின் உதவியால் இயங்கிய பிரித்தானியக் கடற்படைக் கப்பல் ஐந்தாவது எச்.எம்.எசு சலஞ்சர் ஆகும். வேராகுரூசு (Veracruz) துறைமுக நகர ஆக்கிரமிப்பையும் உள்ளடக்கி 1862 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மெக்சிக்கோவுக்கு எதிரான தாக்குதலில் இக் கப்பல் பங்கெடுத்தது. கிறித்தவ மதகுரு ஒருவரையும் அவருடன் இருந்த சிலரையும் கொலை செய்ததற்குப் பழிவாங்கும் முகமாக 1866 இல் இடம்பெற்ற சில பிஜி நாட்டவர் மீதான நடவடிக்கையிலும் இக் கப்பல் பங்கெடுத்து கொண்டது. சலஞ்சர் ஆய்வுப்பயணம் எனப்படும் உலகின் முதலாவது கடல்சார் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டதன் மூலம் இக் கப்பல் புகழ் பெற்றது.

சிஎஸ்எஸ் வெர்ஜீனியா
சிஎஸ்எஸ் வெர்ஜீனியா இரும்புத் தகடுகளால் போர்த்தப்பட்ட ஒரு போர்க்கப்பல் ஆகும். அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில் மாநிலங்கள் கூட்டமைப்பின் கடற்படையால் பயன்படுத்தப்பட்ட இக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட யூஎஸ்எஸ் மெர்ரிமக் என்னும் கப்பலின் எஞ்சிய பாகங்களைக் கொண்டு கட்டப்பட்டது.
இது 1862 மார்ச்சில் இடம்பெற்ற பெயர்பெற்ற ஹம்ப்டன் வழிப் போரில் யுஎஸ்எஸ் மொனிட்டர் என்னும் கப்பலுக்கு எதிராகப் போரிட்டது. இரும்புத் தகடுகளால் போர்த்தப்பட்ட இரண்டு கப்பல்களுக்கு இடையே நடைபெற்ற முதற் போர் என்பதனால் இப் போர் உலகக் கடற்படை வரலாற்றில் குறிப்பிடத்தக்கது

Comments

  1. ....வணக்கம்..இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி உங்கள் வாழ்த்துக்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்