பண்டைய கிரேக்கக் கடவுளான பன்னிரு ஒலிம்பியர்கள்

பண்டைய கிரேக்கக் கடவுளான பன்னிரு ஒலிம்பியர்களை பற்றிய பதிவு ஆகும்

ஆர்ட்டெமிஸ்
ஆர்ட்டெமிஸ் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு முதன்மையான பெண் கடவுள் ஆவார். இவர் ஜூஸ் மற்றும் லீட்டோ ஆகியோரின் மகள். மேலும் இவரும் அப்போலோவும் இரட்டையர்கள். பிறப்பு அறுவடை இயற்கை ஆகியவற்றின் கடவுள ஆவார். இளம்பெண்களைக் காப்பவராகவும் இவர் விளங்குகிறார். இவர் கைகளில் வில்- அம்பு ஏந்திக் காணப்படுவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் டயானா.








ஹெஸ்டியா

ஹெஸ்டியா பண்டைய கிரேக்கத் தொல்கதைகளில் வரும் பெண் கடவுள் ஆவார். இவர் ஹார்த் என்று அழைக்கப்படும் செங்கல் அல்லது கல்லால் ஆன அடுப்பிற்கு கடவுள் ஆவார். ஒவ்வோர் வீட்டிலும் உள்ள ஹார்த் இவரது உறைவிடமாகும். மேலும் நகர்மண்டபத்திலும் ஓர் அடுப்பு இருக்கும். அதுவும் இவரது உறைவிடம் ஆகும். பொதுவாக பண்டைய கிரேக்கர்கள் புதிய குடியேற்றங்களை அமைக்கும் போது இங்கிருந்து நெருப்பை எடுத்துச் சென்று புது இடத்தில் வைப்பர்.







சூசு
சூசு கிரேக்கத் தொல்கதைகளின் படி கடவுள்களின் அரசன் ஆவார். இவர் ஒலிம்ப்பஸ் மலையை ஆள்பவர். வானம் மற்றும் இடி ஆகியவற்றின் கடவுள். இவருடைய சின்னங்கள் இடி கழுகு காளை மற்றும் ஓக் மரம் ஆகியனவாகும். இவர் குரோனஸ் மற்றும் ரியா ஆகியோரின் கடைசி மகன். இவருக்கு இணையான உரோமக் கடவுள் ஜூப்பிடர்.
இவருடைய மனைவி ஹீரா. அப்போலோ ஆர்ட்டெமிஸ் அத்தீனா ஆகியோர் இவரது மக்கள்.



ஹெப்பஸ்தஸ்

ஹெப்பஸ்தஸ் ஒரு கிரேக்கக் கடவுள் ஆவார். இவர் பன்னிரு ஒலிம்ப்பியர்களுள் ஒருவர். இவர் நுட்பம் நெருப்பு மாழைகள் மாழையியல் ஆகியவற்றுக்கும் கருமான் கைவினைஞர் சிற்பிகள் ஆகியோருக்கும் கடவுள் ஆவார். இவரே எரிமலைகளின் கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார். ஹீரா இவரது தாய். ஏரிஸ் இவரது உடன்பிறந்தவர்.



அப்ரடைட்டி

அப்ரடைட்டி பண்டைய கிரேக்கத் தொல்கதைகளில் வரும் பெண் கடவுள் ஆவார். இவர் காதல் அழகு lust இவற்றுக்கான கடவுள் ஆவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் வீனஸ். புறா குருவி அன்னம் ஆகியன இவருக்கு புனிதமானவை ஆகும்.









போசீடான்

போசீடான் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு கடவுள் ஆவார். இவர் கடல் நிலநடுக்கம் மற்றும் குதிரை ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார். இவருக்கு இணையான ரோமக் கடவுள் நெப்டியூன் ஆவார். இவர் ஜூஸ் கடவுளின் உடன் பிறந்தவர். இவருக்கு நிறைய பிள்ளைகள் இருந்தனர்









ஹெர்மிஸ்

ஹெர்மிஸ் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஓர் ஒலிம்பியக் கடவுள் ஆவார். இவர் பயணிகள் ஓடுகள வீரர்கள் புத்தாக்கம் எல்லை இடையர்கள் கவிஞர்கள் வணிகம் இவற்றுக்கான கடவுளாகத் திகழ்கிறார். மேலும் வஞ்சகத் திருடர்கள் மற்றும் பொய்யர்களின் கடவுளாகவும் இவர் விளங்குகிறார்.ஆமை சேவல் இரண்டு பாம்புகள் சுற்றிய கோல் ஆகியவை இக்கடவுளின் சின்னங்கள். ரோம கடவுளான மெர்க்குரி இக்கடவுளுக்கு சமமானவர்






டெமெட்டர்


டெமெட்டர் கிரேக்கத் தொல்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் டைட்டன்களாகிய குரோனஸ் மற்றும் ரியா ஆகியோரின் மகள். இவர் தானியம் மற்றும் அறுவடை இவற்றுக்கான கடவுள். இவருக்கு இணையான ரோமக்கடவுள் சீரஸ் ஆவார். பூவியின் பசுமை பாதுகாப்பவளாகவும் திருமண பந்தத்தை காப்பவளாகவும் புதிய காலநிலைகளை அளிப்பவளாகவும் நோக்கப்பட்டாள். கிரேக்க பழங்கதைகளின் படி டெமெட்டர் அளித்த பெருங்கொடை தானியங்களேயாகும். அவற்றின் முலமே மனிதன் விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு வேளாண்மையில் ஈடுபட்டான்.




ஏரிஸ்

ஏரிஸ் கிரேக்கத் தொல்கதைகளில் வரும் கடவுளர்களான ஜூஸ் மற்றும் ஹீரா ஆகியோரின் மகன் ஆவார். இவர் போருக்கான கடவுள். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மார்ஸ் ஆவார். போர்க்கலையில் சிறந்தவராக பொதுவாக அறியப்பட்டாலும் ஹோமர் எழுதிய இலியட் காப்பியத்தில் ஏரிஸ் சற்று கோழையாகவே சித்தரிக்கப்படுகிறார். இவரது தமக்கையான ஏதினா திட்டம் வகுத்து போரிடுவதால் போர்க்கலையில் சிறந்தவளாகவும் ஏரிஸ் சற்றும் திட்டம் வகுக்காமல் வன்முறையில் இறங்குபவராகவும் வர்ணிக்கப்படுகிறார்கள்






அப்போலோ

அப்போலோ கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்பட்டிருக்கும் ஒரு கடவுள் ஆவார்.இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். அப்போலோ கிரேக்கக் கடவுளர்களான ஜூஸ் மற்றும் லீட்டோ ஆகியோரது மகன்.ஆர்ட்டெமிஸ் இவருடைய சகோதரி ஆவார். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். இவர் வேளாண்மை கால்நடைகள் ஒளி உண்மை ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். மேலும் இவரே மனிதர்களுக்கு நோய்களை குணப்படுத்தும் வித்தையைக் கற்றுக்கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது






அத்தீனா

அத்தீனா கிரேக்கக் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் அறிவு தந்திரம் போர் இவற்றுக்கான கடவுள் ஆவார். இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே ஏதென்ஸ் நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது








ஹீரா
ஹீரா கிரேக்கத் தொல்கதைகளில் வரும் ஜீயஸின் அக்காளும் மனைவியும் ஆவார். இவள் திருமணத்தின் கடவுள். இவரே கிரேக்கக் கடவுளரின் அரசி. இவருக்கு இணையான ரோமக் கடவுள் ஜூனோ. போர்க்கடவுளான ஏரிஸ் இவரது மகன் ஆவார். வீறுடையவளாகவும் மன அமைதியுடையவளுமாகவும் சித்தரிக்கப்படும் ஹீரா வட்ட வடிவிலான மணிமுடியை தலையில் அணிந்திருப்பாள். தனது கையில் பண்டைய கிரேக்கத்தில் உதிரத்தின் அடையாளமாகவும் இறப்பின் அடையாளமாகவும் கருதப்பட்ட மாதுளம் பழத்தை கொண்டிருப்பாள்.
ஹீரா தனது பொறாமை குணத்திற்கும் பழியுணர்வுக்கும் பெயர் பெற்ற கிரேக்க கடவுள்.


Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்