உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா கொழுத்த மனிதன் (Fat Man) என்ற பெயரைக் கொண்ட இரண்டாவது அணுகுண்டை வீசி ஆகஸ்டு 9 உடன் 65 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது

உலக வரலாற்றில் இரண்டு முறை அணுகுண்டு போருக்காக உபயோகபடுத்த பட்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா தன்னை தாக்கியஜப்பானை தாக்கியழிக்க 2 அணுகுண்டுகளை பயன்படுத்தியது. முதல் அணுகுண்டு சின்னப் பையன் (Little boy) என்று பெயரிடபட்டு ஆகஸ்டு 6ஆம் நாள் முன்காலை இரோசிமா நகரின் மீது வெடிக்க பட்டது. மூன்று நாட்களுக்குப் பின் இரண்டாவது அணுகுண்டு கொழுத்த மனிதன் (fat man) நாகசாகி நகரின் மீது வீச பட்டது. இந்த குண்டு வீச்சுகளால் பலியானோர் எண்ணிக்கை சுமார் 120,000. கதிரியக்கத்தினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை கணக்கிலடங்கா.

'கொழுத்த மனிதன்' (Fat Man)
'கொழுத்த மனிதன்' (Fat Man) என்பது ஜப்பான் நகரான நாகசாக்கி மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டாகும்.

அமெரிக்காவின் முன்னைய அணுவாயுத வடிவமைப்புக்கு 'கொழுத்த மனிதன்' என்ற மாதிரியைப் பின்பற்றியே அமைக்கப்பட்டன. இது புளுட்டோனியம் கருவைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆயுதம் ஆகும்.

கொழுத்த மனிதன் அணுகுண்டு பற்றிய தரவுகள்,அளவீடுகள்
வகை :-அணு ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடு :-ஐக்கிய அமெரிக்கா
எடை :-10200 இறாத்தல். (4630 Kg)
நீளம் :-10.6 அடி (3.25 மீற்றர்)
விட்டம் :-5 அடி (1.52 மீற்றர்)
Blast yield :-21 கிலோதொன்கள்

'கொழுத்த மனிதன்' நிலத்தில் இருந்து 1,800 அடிகள் (550 மீற்றர்) உயரத்திலிருந்து 'பொப்ஸ்கார்' என்ற பி-29 ரகப் போர் விமானத்தில் இருந்து மேஜர் சார்ல்ஸ் சுவீனி என்ற போர் விமானியால் வீசப்பட்டது. இக்குண்டு கிட்டத்தட்ட 21 கிலோதொன்கள் டிஎன்டி அல்லது 8.78×1013 ஜூல் =88 தொன் ஜூல் அளவு ஆற்றலை வெளிப்படுத்தியது. நாகசாக்கி மலைப்பாங்கான பகுதி என்பதால் ஹிரோஷிமாவில் ஏற்பட்ட தாக்கத்துடன் ஒப்பிடும் போட்டு இங்கு சற்றுக் குறைவான விளைவுகளே ஏற்பட்டன. கிட்டத்தட்ட 39,000 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 25000 பேர் காயமடைந்தனர். இதன் தாக்கத்தினால் பின்னர் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். 6.7 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் முற்றாக எரிந்து சாம்பலாகின.

Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்