பண்டய காலத்தில் பயன்படுத்திய நாட்காட்டிகள்


கிரெகொரியின் நாட்காட்டி
கிரெகொரியின் நாட்காட்டி என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது யூலியின் நாட்காட்டியின் ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரானஅலோசியஸ் லிலியஸ்(Aloysius Lilius)என்பவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய பாப்பரசரான 13வது கிரெகரியின்ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இதன்படி இயேசுபிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன மேலும் இக்காலப்பகுதி 'எம் ஆண்டவரின் ஆண்டு' எனவும் பெயரிடப்பட்டது. கிபி 6 வது நூற்றாண்டில் உரோமைபாதிரியார் ஒருவரால் துவக்கப்பட்ட முறையாகும்.

யூலியின் நாட்காட்டி
லியின் நாட்காட்டி அல்லது சூலியன் நாட்காட்டி என்பது கிமு 46 இல் யூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது உரோம் உரோமில் பாவனையில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்தரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே யூலியின் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும்.

இந்து நாட்காட்டி
இந்து நாட்காட்டி என்று குறிப்பிடப்படும் நாட்காட்டி காலவோட்டத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மாறுபட்டுள்ள பல நாட்காட்டிகளாகும்.இந்தியத் தேசிய நாட்காட்டிஅவற்றில் ஒன்றாகும்.வானியல் அறிஞர்களானஆரியபட்டா(கிபி 499) மற்றும் வராக மிகிரர் (6ஆம் நாற்றாண்டு) வடிவமைத்த பஞ்சாங்கம் என்ற அடிப்படையில் இவை அமைந்தவை

இசுலாமிய நாட்காட்டி
இசுலாமிய நாட்காட்டி அல்லது முஸ்லிம் நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி, ஓர்சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் பல முஸ்லிம் நாடுகளில் நிகழ்வுகளைப் பதிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. தவிர இசுலாமிய சமய புனிதநாட்களையும் பண்டிகைகளையும் கணக்கிட முஸ்லிம்கள் உலகெங்கும் இந்த நாட்காட்டியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜிரா அதாவது இசுலாமிய இறைதூதர் மொகமது மெக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டாகும். ஒவ்வொரு ஆண்டும் H -Hijra அல்லது AH என குறிக்கப்படும். ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் before Hijra (BH)என வழங்கப்படும்.

சந்திர நாட்காட்டி
சந்திர நாட்காட்டி (lunar calendar) சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியாகும்.மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சுத்தமான சந்திர நாட்காட்டிஇசுலாமிய நாட்காட்டி அல்லது ஹிஜிரி நாட்காட்டி ஆகும். இந்த நாட்காட்டி எப்போதுமே 12 சந்திர மாதங்கள் கொண்டது. .சூரிய நாட்காட்டியுடன்ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருங்கிணையும்.இது பெரும்பான்மையும் சமய வழிபாடுகளுக்கு மட்டுமே பாவித்தாலும் சௌதி அரேபியாவில் வணிக பயன்பாட்டிற்கும் பாவிக்கப்படுகிறது. ஓர் சந்திர ஆண்டில் 354.37 நாட்கள் உள்ளன.

சூரியசந்திர நாட்காட்டி
சூரியசந்திர நாட்காட்டிகள் சந்திர நாட்காட்டி போன்று மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தை கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கின்றன. சப்பானிய நாட்காட்டி 1873 வரை சூரியசந்திர நாட்காட்டியாக இருந்ததுகிருத்துவ பண்டிகையான உயிர்த்த ஞாயிறு நாளை சூரியசந்திர நாட்காட்டியை ஒட்டியே தீர்மானிக்கிறார்கள்.

சீன நாட்காட்டி
சீன நாட்காட்டி ஓர் சூரியசந்திர நாட்காட்டியாகும்.இது சீனா தவிர பல கிழக்கு ஆசிய பண்பாடுகளில் பின்பற்றப்படுகிறது. இது சீனர்களால் கி.மு 500 ஆண்டில் சீரமைக்கப்பட்டதுசீன நாட்காட்டி பரம்பரை விடுமுறை தினங்கள் சீன புத்தாண்டு (அல்லது வசந்த திருவிழா டுயான் வு பண்டிகை மற்றும் நடு மழைக்கால பண்டிகை போன்றவற்றை குறிக்கவும் திருமண நாள் புதுமனை புகுவிழா போன்றவற்றிற்கு சோதிடப்படி நல்லநாள் தெரிந்தெடுக்கவும் பயனாகிறது.

சூரிய நாட்காட்டி
சூரிய நாட்காட்டி (solar calendar) சூரியனை வலம் வரும் புவியின் நிகழிடத்தைப் பொறுத்து நாட்களை அமைத்த நாட்காட்டி யாகும்.மாறாக வான்வெளியில் நகர்வதாக உணரப்படும் சூரியனின் நிகழிடத்தை கொண்டு அமைக்கப்பட்ட நாட்காட்டி என்றும் கூறலாம்.
சூரிய வலப்பாதையில் புவியின் நிகழிடம் சம இரவு நாள் கொண்டு கணிக்கப்படுமானால் அந்த நாட்காட்டியால் காலங்களை துல்லியமாக காட்ட வியலும். அத்தகைய நாட்காட்டி காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி என அறியப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா?

மரங்கொத்திப்பறவையின் நாக்கு மிகவும் நீளமாக இருப்பது ஏன் தெரியுமா?

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம்