உலகில் அழிந்து வரும் விலங்குகள் தொகுப்பு-02

எனது முந்தைய பதிவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.

மனிதன் தோன்றுவதற்கு முன்னேயே தோன்றிய மிருகங்கள் அழிந்து வருகிறது என்றால் அடுத்து அழியப்போவது மனிதர்கள்தான்...
மிருகங்களை அழித்து வருவதன் மூலம் மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ள முற்படுகிறான் என்றுதான் கொள்ள வேண்டும்..

இன்றைய உலகில் மனிதனின் உணவுத்தேவைக்காகவும் வேறு சில தேவைக்காகவும் நாள்தோறும் விலங்குகள் வேட்டை ஆடப்படுகிறது. இதனால் சில விலங்குகள் அழியும் தறுவாய் மிக விரைவில் அவைகளில் சில விலங்குகள் ....

பனிக்கரடி polar bear
பனிக்கரடி (துருவக் கரடி) நில உருண்டையின் கடும் உறைபனி சூழ்ந்தஆர்க்டிக் பகுதியில் காணப்படும் இவை ஏறத்தாழ 20-25 ஆண்டுகள் வாழும்வெண்ணிறக்கரடி இனமாகும்.

இது இறைச்சி உண்ணும் ஊனுண்ணிப்பாலூட்டி. இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாடவல்லது. இவற்றின் முதன்மையான உணவு சீல் ஆகும். வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோகிராம்எடையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோகிராம் எடையுடையவை. இவை இளவேனிற் (வசந்த) காலத்தில் கருத்தரிக்கின்றன. இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240 நாட்களாகும். பொதுவாக இரண்டு குட்டிகள் பிறக்கின்றன. உலகில் ஏறத்தாழ 20000 பனிக் கரடிகள் உள்ளதாகக் கணக்கெடுகப்பட்டுள்ளது.

நீர்யானைகள்
நீர்யானைகள் ஆபிரிக்காவைச் சேர்ந்த பாலூட்டியாகும். இது ஒரு தாவர உண்ணிஆகும். கூட்டங்களாக வாழும். ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும். இவை 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இவை 3.5 மீட்டர் நீளமானவை; 1.5 மீட்டர் தோளுயரமுடையவை; 1500 முதல் 3200கிலோகிராம் நிறையுடையவை. பெண் நீர் யானைகள் ஆண்களைவிட சிறியவை.

நீர்யானைகள் தாமாக மனிதரைத் தாக்குவதில்லை. ஆனால் அவற்றின் ஆள்புலத்தினுள் நுழைவோரை மூர்க்கமாகத் தாக்கக் கூடியவை. நீர்யானைக் குட்டிகள் நீரினுள்ளேயே பிறப்பதால் தம் முதல் மூச்சுக்காகவே நீந்தி நீர்மட்டத்திற்கு வருகின்றன. நீருக்கடியிலேயே முலைப்பால் அருந்துகின்றன

(Babyrousa celebensis) சுலவேசி நாற்கொம்புப் பன்றி

சுலவேசி நாற்கொம்புப் பன்றி நான்கு கொம்புள்ள பேபிரூசா செலெபென்சிசு என்னும் அறிவியற் பெயர் கொண்ட சுலவேசி நாற்கொம்புப் பன்றி இனம்இந்தோனீசியத் தீவுகளில் வடக்குசுலவேசியையும் அருகே உள்ள லெம்பேத் தீவுகளையும் இயற்கை வாழிடமாகக் கொண்டுள்ள ஓரினம். நான்கு கொம்புகள் உள்ள விலங்கு என்று கூறினாலும் அவற்றுள் இரண்டு கொம்புகள் இவ்விலங்கின் கீழ்த்தாடையின் நாய்ப்பற்கள் அல்லது புலிப்பற்கள் ஆகும். இதனை எயிறு என்றும் கூறுவர்




(Cheetah) சிவிங்கிப்புலி

சிவிங்கிப்புலி பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்தபாலூட்டி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இதனால் மணிக்கு 105 கிமீ (65 மைல்) வேகத்துக்கு மேல் ஓட முடியும். ஓடும் போது வெறும் மூன்று நொடிகளில் 110 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும்

இதன் உடல் முழுவதும் 2 முதல் 3 செமீ அளவுள்ள வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும். அதன் கீழ்வயிற்றுப்பகுதியில் புள்ளிகள் எதுவும் காணப்படாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும். வயதுவந்த ஒரு சிவிங்கிப்புலி 40 முதல் 65 கிகி எடையும் 112 முதல் 135 செமீ நீளமான உடலும் 84 செமீ நீளமுடைய வாலும் கொண்டிருக்கும். ஆண் சிவிங்கிப்புலிகள் பெண் சிவிங்கிப்புலிகளை விட சற்றுப் பெரிய தலையை உடையதாய் இருக்கும்.

பெண் சிவிங்கிப்புலிகள் 20 முதல் 22 மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகின்றன. ஆண் சிவிங்கிப்புலிகள் 12 மாதங்களிலேயே இப்பருவத்தை எட்டி விடுகின்றன. பெண்சிவிங்கிப்புலியின் கர்ப்பகாலம் 98 நாட்கள் ஆகும். சிவிங்கிப்புலி குட்டிகள் பிறக்கும் போது வெறும் 150 முதல் 300 கிராம் எடையுள்ளனவாகவே உள்ளனசிவிங்கிப்புலி இப்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அற்றுப்போய்விட்டது. மேலும் ஆப்பிரிக்க கண்டத்தில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது

நாற்கொம்பு மான் Tetracerus

நாற்கொம்பு மான் தெற்காசியாவின் திறந்தவெளிக்காடுகளில் வாழும் ஒரு மானினமாகும். இது இந்தியாவில் கங்கை நதியின் தெற்கிலிருந்து தமிழ் நாடு வரையிலும் ஒரிசா மாநிலத்திற்கு மேற்கிலிருந்துகுசராத்தின் கீர் காடுகள் வரை வாழ்கின்றது. மேலும் இவ்வினத்தின் ஓரு சிறிய உயிர்த்தொகை நேப்பாளத்திலும்வாழ்கின்றது.வளர்ந்த விலங்கு 55-60 செ.மீ உயரமும் 20 - 22 கிலோ எடையும் கொண்டிருக்கும்.

பெண் விலங்குகளுக்கு கொம்புகள் இராது. ஆண்களுக்கு நான்கு கொம்புகள் இருக்கும். இதில் பின்புறம் உள்ள இரண்டு கொம்புகள் பிறந்த சில மாதங்களிலேயே முளைக்கத் தொடங்கிவிடும். முன்புறம் உள்ள கொம்புகள் பிறந்ததிலிருந்து 14-15 மாதங்களுக்குப் பின் முளைக்க ஆரம்பிக்கும்.இம் மான் இன்னமும் பரவலாக காணப்பட்டாலும் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. தற்பொழுது 1000 முதல் 10000 வரை இருக்கலாம் என கருதப்படுகின்றது.

டிங்கோ நாய்

டிங்கோ நாய் ஆஸ்திரேலியாவில் உள்ள பழக்கப்படுத்தபடாத காட்டுநாய் டிங்கோ என்னும் நாய்.
இதன் எடை 10 முதல் 24 கிகி இருக்கும்; உயரம் ஏறத்தாழ 44 செ.மீ முதல் 63 செ.மீ வரை இருக்கும்; உடல் நீளம் 86 முதல் 122 செ.மீ இருக்கும். பெரும்பாலும் இவை குரைப்பதில்லை (குலைப்பதில்லை). மரத்திலும் ஏறவல்லவை.ஆண்டிற்கு ஒருமுறைதான் இனப்பெருக்கம் செய்கின்றன

Comments

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்