ஏரிகள் உருவான வரலாறு


பூமித்தாய் உருவாக்கிய அதிசயங்களில் ஏரிகளும் முக்கியமானவையே. தண்ணீர் பாய்ந்து வந்து நிறைகிற வெற்றிடமோ பள்ளமோ நாளடைவில் ஏரியாகி விடும். தண்ணீர் ஊறி மண் வழியே வெளியேறாத நிலமும் அணைக்கட்டுகளுக்குப் பின்னால் உள்ள இடங்களும்தான் ஏரிக்கு ஏற்றவை. பூமித்தட்டின் நடனமும் பனிக்கட்டி உருகுதலுமே பல ஏரிகள் ஏற்பட காரணம். படிப்படியாக பூமித்தட்டு மேலே எழும்போது அணைகள் போன்ற அமைப்புகளும் கன்னாபின்னா வென இயக்கம் ஏற்படும்போது அகன் ஆழமான ஏரிகளும் உருவாகின்றன. ஆப்ரிக்காவையும் ஆசியாவையும் வெட்டியதுபோல பிரிக்கும் ரிஃப்ட் பள்ளத்தாக்கு பல கன்னாபின்னா ஏரிகள் அமையக் காரணமாக இருந்தது. 

உதாரணம் சாக்கடல் என்றழைக்கப்படுகிற டெட் ஸீ, நயஸா ஏரி. உருகும் பனிக்கட்டிப்பாறைகள் தரையைத் தேய்த்து, சுத்தம் செய்து பள்ளங்களை உருவாக்குகின்றன. அதோடு அங்கே நிறைய வீழ்படிவுகளையும் கொண்டுவந்து சேர்த்து, ஒரு முகடு அல்லது வரப்பு போன்ற அமைப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் இயற்கை அணைக்கட்டுகள் உருவாகின்றன. வட அமெரிக்காவின் பிரமாண்ட ஏரிகளும், ஐரோப்பாவின் ஆல்பைன் ஏரிகளும் இப்படித் தோன்றியவையே. ஹைதராபாத் நகரத்தை அருமையான சுற்றுலாத்தலமாக மாற்றிய பெருமை ஹுசைன் சாகர் என்ற ஏரியைச் சேரும்.

நன்றி இணையம் 

Comments

  1. நல்ல தகவல்...வாழ்த்துக்கள்...
    நன்றி.


    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)


    சின்ன வேண்டுகோள் : இந்த உலவு லோகோ அல்லது ஓட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது.....
    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கரப்பான் பூச்சி தலை இல்லாமல் வாழுமா?

நன்னம்பிக்கை முனை cape of good hope

நம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்