எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி

எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி
இந்தப் பறவைக்கு உள்ளது!
இது தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்!
இது ஏன் சாம்பலாகிறது?
பீனிக்ஸ் பறவை ஒரு லட்சியவாதி!
இதற்கு சூரியன் தான் லட்சியம்!
சூரியனைத் தொடவேண்டும் என்பதே
இந்தப்பறவையின் வாழ்க்கை லட்சியம்!
பீனிக்ஸ் பறவை தன் சிறகுகளை அகல விரித்துப் பறக்கும்!
சூரியனை நோக்கி உயரும்.
ஒரு குறிப்பிட்ட எல்லையில், சூரியனின் அதீத வெப்பத்தால் உடல் கருகி மண்ணில் விழும்!
மீண்டும் உயிர்க்கும்!
மீண்டும் சூரியனை நோக்கிக் கம்பீரமாய்ப் பறக்கும்!
வெற்றி பெற்ற எந்த ஒருவரின் வாழ்க்கையிலும் ஒரு பீனிக்ஸ் பறவை இருக்கிறது!!
அந்த போர்ப் பறவையின் ஆயுள் ரேகையில்
தங்க மயிலின் தன்னம்பிக்கையின் ரேகையும் கூடுகட்டிப் பெருமைப்படுத்துகிறது!!

- பீனிக்ஸ் பறவை பற்றிய இன்னொரு கருத்து
பீனிக்ஸ் பறவை சாம்பல் ஆவதற்கும் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெறுவதற்கு இன்னுமொரு வியப்பான காரணம் சொல்லப்படுகின்றது.
பீனிக்ஸ் பறவை ஒரு இலட்சிய வாதிப் பறவை எனவும் இதற்கு சூரியனைத் தொட வேண்டும் என்பதே வாழ்க்கை இலட்சியம் எனவும்இஅது சூரியனை நோக்கி பறக்கும் போது குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பின் சூரியனின் அதீத வெப்பம் தாங்க முடியாமல் உடல் கருகி மண்ணில் விழுந்து மீண்டும் உயிர்த்து தொடர்ந்து தனது பயணத்தை தொடருமாம்.பீனிக்ஸ் பறவை தானாகவே தன்னை வேறு துணை இன்றி உருவாக்கும். இவை பழங்களிலோ பூக்களின் தேனிலோ தங்கி வாழ்வதில்லை. மாறாக மரங்களில் இருந்து வழியும் பாலிலேயே தங்கி வாழ்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
எந்த பறவைக்கும் இல்லாத சக்தி பீனிக்ஸ் பறவைக்கு இருப்பதாக நம்பப்படுவதனாலும் இனிமையான ரசிக்கக்கூடிய இசையை ஒத்த ஒலியில் ஒலி எழுப்பும் வல்லமை உடையதனாலும் முடிவிலி அற்ற பறவை என்பதற்காகவும் குறிப்பாக அனைவராலும் அறியப்பட்ட பறவை பீனிக்ஸ் ஆகும்.
- ஆபிரிக்கர்களின் நம்பிக்கை
ஆபிரிக்காவில் பீனிக்ஸ் பறவை வாழ்ந்ததாகவும் அவை கற்பனை ஆனவை அல்ல எனவும் நம்பப்படுகிறது. பீனிக்ஸ் பறவைகள் தமது முட்டைகளை நெருப்பில் இருந்து வரும் சாம்பலில் அல்லது காட்டுத் தீயின் பின் அவற்றின் சாம்பலில் இடும் இயல்பை கொண்டதாம்.இதனை கண்ட அன்றைய மக்கள் இப்பறவைகள் நெருப்பில் இருந்து பிறப்பதாக தவறாக புரிந்து கொண்டமையால் அவை பற்றி பல்வேறு கட்டுக் கதைகள் உருவாகியது எனவும் ஒரு கருத்து நிலவுகின்றது.
எவ்வாறு இருப்பினும் இவை உயிர் வாழ்ந்தமைக்கான எவ்வித தடையங்களும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. எனினும் புரானக் கதைகளிலும் பண்டைய புகழ் பெற்ற ஓவியங்களிலும் இவை முக்கியமான இடத்தை பெற்றுள்ளன.
- புராணக்கதைகளில் பீனிக்ஸ்
பீனிக்ஸ் பறவை என்பது பாரசீக கிரேக்க உரோம எகிப்திய சீன மற்றும் பினோனிக்கன்களின்(Phoencians ) புராதன கதைகளில் இடம்பெற்ற கற்பனையான ஒரு பறவை(நெருப்பு பறவை)ஆகும்.
புராதன கதைகளின் படி கற்பனை பறவை ஆகிய இதன் தோற்றம் கடும் சிவப்பு நிற உடலையும் தங்க நிறத்திலான வால்ப்பகுதியையும் கொண்டு காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பீனிக்ஸ் பறவையின் நிறம் குறித்து ஒவ்வொரு புரானக்கதைகளிலும் ஒவ்வொரு விதமாக கூறப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவையானது 500 தொடக்கம் 1000 வருடங்கள் வரையிலான வாழ்க்கை சுழற்ச்சியை கொண்டதாக நம்பப்படுகிறது.
இப் பறவையானது தனது ஆயுள் முடிவதாக உணரும் தறுவாயில் தானாகவே தனக்கென்று ஓர் மரத்தின் சிறு கிளைகளைக் கொண்டு கூடு ஒன்றை அமைத்து அதில் தனக்கு தானே தீ வைத்துக்கொள்ளுமாம்.தீ வைத்துக் கொண்ட பீனிக்ஸ் பறவையும் அதன் கூடும் முற்றாக எரிந்து தீர்ந்ததும் அதில் எஞ்சிய சாம்பலில் இருந்து புதிய பீனிக்ஸ் பறவை அல்லது புதிய பீனிக்ஸ் பறவையின் முட்டை தோன்றுவதாக நம்பப்படுகிறது.
இவ்வாறாக மீண்டும் பிறக்கும் பீனிக்ஸ் பறவை சுயமாகவே தான் வாழும் காலத்தை நிர்ணயித்து புதிய ஒரு வாழ்க்கை சுழற்ச்சியில் வாழுமாம்.
மேலும் சில புராணக் கதைகளின் படி புதிய பீனிக்ஸ் பறவை தனக்கு உயிர் கொடுத்த பீனிக்ஸ் பறவையின் உடலின் சாம்பலை வாசனை உள்ள பொருட்களைக் கொண்டு முட்டை ஒன்றை அமைத்து அதில் சேமித்து எகிப்தில் உள்ள ஹெலியோபோலிஸ் என அழைக்கப்படும் சூரிய கடவுளுக்கு என அமைக்கப்பட்ட கோயிலில் பாதுகாத்து வைக்குமாம்.
இது இவ்வாறு இருக்க இறந்த பறவையின் சாம்பலை அது அதன் சரணாலயமாக கருதும் சூரியனில் புதைக்க தனது இருப்பிடத்தில் இருந்து சூரியனை நோக்கிச் செல்லுவதாகவும் நம்பப்படுகிறது
நன்றி இணையம்
பீனிக்ஸ் பறவையைப் பற்றி விளக்கமான பதிவு ! நன்றி !
ReplyDelete