கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் தொகுப்ர்-02

இது முந்தைய பதிவின் தொடர்ச்சியாகும். முந்தைய பதிவிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள்

இட்சாக் ரபீன் (Yitzhak Rabin,)

இட்சாக் ரபீன் பிறப்பு மார்ச்1 1922 – இறப்பு நவம்பர் 4 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும்இ அதன் இராணுவத் தலைவரும் ஆவார். இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள் 1974-1977 வரையும் 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில் இருந்தவர். 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதி உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.1994 ஆம் ஆண்டில் சிமோன் பெரெஸ் யாசர் அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது.
சேக் முஜிபுர் ரகுமான் (Shekh Mujibur Rôhman)


சேக் முஜிபுர் ரகுமான் (மார்ச் 17 1920 – ஆகஸ்ட் 15 1975) கிழக்கு பாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர். வங்காள தேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது தலைமை அமைச்சராகவும் இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் 1975 இல் படுகொலை செய்யப்பட்டனர்..

ராஜீவ் காந்தி (Rajiv Gandhi)

ராஜீவ் காந்தி (பிறப்பு ஆகஸ்ட் 20 1944 - இறப்பு மே 21 1991)இ இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984 அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இவர் 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஜோர்தானின் முதலாம் அப்துல்லா (Sir Abdullah I bin al-Hussein)

(சேர் முதலாம் அப்துல்லா பின் அல்-உசேன் (1882 - ஜூலை 20 1951) ஜோர்தான் நாட்டின் மன்னராக 1949 முதல் 1951 வரை இருந்தவர். இவர் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த டிரான்ஸ்ஜோர்தானின் அமீர் ஆக (1921-1946) இருந்து பின்னர் மே 25 1946 முதல் 1949வரை அதன் மன்னராகவும் இருந்தார். 1949 முதல் இறக்கும் வரை (1951) விடுதலை பெற்ற ஜோர்தானின் மன்னராக இருந்தார். இவர் ஜோர்தான் நாட்டை அமைத்த சிற்பி எனப் போற்றப்படுகிறார். ஜூலை 20 1951 இல் அப்துல்லா ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்சா மசூதியில் வெள்ளிக்கிழமை ஆராத்ஹனையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது 21 அகவையுடைய 'முஸ்தபா ஊஷோ' என்ற பாலஸ்தீன இளைஞன் ஒருவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
மரீ பிரான்சுவா சாடி கார்னோ

மரீ பிரான்சுவா சாடி கார்னோ ஆகஸ்ட் 11 1837 – ஜூன் 25 1894) பிரான்சின் அரசியல்வாதியும் மூன்றாம் பிரெஞ்சுக் குடியரசின் நான்காம் அரசுத் தலைவரும் ஆவார். 1887 முதல் 1894 வரையில் படுகொலை செய்யப்படும் வரையில் பிரெஞ்சு அதிபராக இருந்தார்.ஜூன் 24 1894 இல் லியோன் என்ற இடத்தில் ஒரு பொது மேடையில் உரையாற்றும் போது 'சான்டெ கசேரியோ' என்ற இத்தாலிய அரசு எதிர்ப்பாளன் ஒருவனால் குத்திப் படுகாயமடைந்து அன்று நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இறந்தார்.





Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்