இயற்கையின் ஒரு தொழிற்பாடு வெந்நீரூற்று
வெந்நீரூற்று அல்லது வெந்நீர்ச்சுனை (Geyser) என்பது நீரானது நீராவியுடன் சேர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படுவதாகும்.
புவியின் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீரூற்றுகள் இருப்பதனால் இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது. பொதுவாக இவை இயக்கநிலையிலுள்ள எரிமலைகள் இருக்கும் இடங்களில் பாறைக் குழம்புகளுக்கு அண்மையாகவே தோன்றியிருக்கும். நிலநீரானது நிலத்தினடியில் கிட்டத்தட்ட 2000 மீட்டர் ஆழத்தில் சூடான பாறைகளைத் தொட்டுச் செல்லும். அப்போது உருவாகும் அழுத்தம் கூடிய கொதிக்கும் நீரானது நிலத் துளைகளூடாக சூடான ஆவியுடன் கூடிய நீரை வேகத்துடன் வெளியேற்றும் செயற்பாட்டினால் இந்த வெந்நீரூற்றுகள் உருவாகின்றன
The geyser Strokkur in Iceland; as a tourist spot.

வெந்நீரூற்றின் உருவாக்கத்திற்கும் தொழிற்பாட்டுக்கும் வாழ்வுக் காலம் சில ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே. பொதுவாக இவை எரிமலை செயற்பாட்டுடன் தொடர்புடையதாகவே இருக்கும். நிலத்தின் கீழாக நீரானது கொதிக்கும்போது உருவாகும் அமுக்கமானது உயர் வெப்பநிலையைக் கொண்ட நீரையும் நீராவியையும் நிலத்தின் உள்ளிருந்து வரும் குழாய்நிரல் அமைப்பினூடாக மேற்பரப்பை நோக்கி வேகமாக வெளியேற்றும்.
வெந்நீரூற்றின் தோற்றத்திற்கு உயர் வெப்பநிலை நிலத்தடி நீர் நிலத்தினடியில் இருந்து மேற்பரப்பை நோக்கி வரும் குழாய் போன்ற அமைப்பு ஆகிய மூன்று நிலவியல் நிலைமைகளும் மிக தேவையாகின்றன
வெந்நீரூற்றுக்கள் காணப்படும் இடங்கள்
வெந்நீரூற்றுகள் உருவாவதற்கு உயர் வெப்பநிலை நிலத்தடி நீர் நிலத்தினுள் காணப்படும் குழாய் அமைப்புக்கள் ஆகிய மூன்றும் இணைந்திருத்தல் அவசியம் என்பதனால் உலகில் மிகச்சில இடங்களிலேயே இவை காணப்படுகின்றன.
- யெலோஸ்டோன் தேசியப் பூங்கா ஐக்கிய அமெரிக்கா
இந்த இடத்திலேயே அதிகளவிலான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன. உலகிலுள்ள வெந்நீரூற்றுகளில் அரைவாசியானவை இங்கேயே காணப்படுகிறது. ஆயிரக் கணக்கில் நீர் மேலே பீறிட்டு எழும்பாத Hot springs எனப்படும் வெந்நீரூற்றுகளும் 300-500 நீர் பீறிட்டு எழும் வெந்நீரூற்றுகளும் இங்கே உள்ளன.

வெந்நீரூற்றுப் பள்ளத்தாக்கு உருசியா
வெந்நீரூற்றுப் பள்ளத்தாக்கு (Valley of Geysers) உருசியாவில் காம்ச்சட்கா (Valley of Geysers) மூவலந்தீவில் (தீபகற்பத்தில்) உள்ளன. இந்த ஒரு இடத்திலேயே இரசியாவில் வெந்நீரூற்றுகள் இருப்பதாயும் அவையே உலகில் இரண்டாவது பெரிய வெந்நீரூற்றுகள் நிறைந்த இடம் எனவும் அறியப்படுகிறது. இந்த இடத்தை 1941 இல் தாத்தியானா உசித்தினோவா (Tatyana Ustinova) என்பவர் கண்டு பிடித்தார். இங்கே கிட்டத்தட்ட 200 வெந்நீரூற்றுகள் அதிகளவிலான நீரை வெளியே உயரத்துக்கு எழுப்பாத வெந்நீரூற்றுகளுடன் சேர்ந்து உள்ளன. மிகவும் தீவிரமான எரிமலை வெடிப்புக்களாலேயே இவை உருவாகியுள்ளன. இங்கு மிகவும் மாறுதலான வகையில் சாய்வாக நீர் பீறிட்டு எழும்.

- எல் டாத்தியோ சிலி
எல் தாத்தியோ என்பது தென்னமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் கடல் மட்டத்திலிருந்து 4200 மீ உயரத்திலுள்ள ஆண்டிய மலைப்பகுதியில் மிகவும் கனன்று கொண்டிருக்கும் நிலையிலுள்ள எரிமலைகளால் சூழப்பட்ட இடத்திலுள்ள பெரிய பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு இடமாகும். இந்த பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 80 வெந்நீரூற்றுகள் காணப்படுவதுடன் இது மூன்றாவது பெரிய வெந்நீரூற்று நிலப்பகுதியாகக் கருதப்படுகிறது. இவை உயரம் குறைந்தவையாகும். இங்கே அதி உயரமாக 6 மீட்டர் மட்டுமே இருப்பினும்இ நீராவியுடன் சேர்த்து 20 மீட்டர் வரை செல்லும்.
- நியூசிலாந்து
நியூசிலாந்தின் வடக்குத் தீவிலுள்ள தாவுப்போ எரிமலை வலயத்தில் (Taupo Volcanic Zone) வெந்நீரூற்றுகள் உள்ளன. 500 மீட்டர் உயரம்வரை செல்லக் கூடிய வெந்நீரூற்றுக்கள் இங்கே உள்ளன
ஐசுலாந்தானது அதிகளவில் வெந்நீரூற்றுகளைக் கொண்ட ஒரு நாடாகும். ஐசுலாந்து தீவு முழுமையிலும் இவ்வகையான வெந்நீரூற்றுகள் பரவிக் காணப்படுகின்றன. 5-8 நிமிடங்களுக்கு ஒரு தடவை 30 மீட்டர் உயரத்திற்கு நீரை வெளியேற்றக் கூடிய ஒரு வெந்நீரூற்று இசுற்றோக்கூருக்கு (Strokkur) அருகில் காணப்படுகின்றது.
தகவலுக்கு மிக்க நன்றி சகோதரம்...
ReplyDeleteதங்கள் பணி தொடரட்டும்...
ReplyDeleteநன்றி சகோதரம்.
ReplyDelete