உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-03
வில்லியம் சொக்லி (William Bradford Shockley பெப்ரவரி 13 1910 - ஆகஸ்ட் 12
1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன் வால்ட்டர் பிரட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ரைட் சகோதரர்கள் (Wright brothers ஓர்வில் (ஆகஸ்ட் 19 1871 – ஜனவரி 30 1948) வில்பர் (ஏப்ரல் 16 1867 – மே 30 1912) என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்ஃமணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.
அடா யோனத் (Ada Yonath எபிரேயம்: பிறப்பு: 22 சூன் 1939) இசுரேலிய படிகவியலாளர். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான 'ரைபோசோம்' (ribosome) எனப்படும் செல்களின் கட்டமைப்பை ஆய்வு செய்ய குளிர்நிலை உயிரிபடிகவியல் முறைகளைக் குறித்த முன்னோடியான தமது ஆய்வுப்பணிக்காக அறியப்பட்டவர்.
டோல்ஃவ் ஃவிக் (Adolf Eugen Fick பிறப்பு: செப்டம்பர் 3 1829 காசல் யேர்மனி - ஆகஸ்ட் 21 1901 பிலன்கன்பெயார்க் பெல்ஜியம்) தொடுகை வில்லையைக் (contact lense) கண்டுபிடித்தவர்.
அய்மே ஆர்கண்ட் Aimé Argand ஜூலை 5 1750 - அக்டோபர் 14 1803) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு இயற்பியலாளரும் வேதியியலாளரும் ஆவார். இவர் எண்ணெய் விளக்கின் வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்தினார். புதிதாக வடிவமைத்த எண்ணெய் விளக்கு இவரது பெயரைத் தழுவி ஆர்கண்ட் விளக்கு என அழைக்கப்பட்டது.
ஆர்க்கிமிடீஸ் (கிமு 287 - கிமு 212) ஒரு கிரேக்கக் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் பொறியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் வானியலாளரும் ஆவார். நீர்நிலையியல் நிலையியல் ஆகிய துறைகளுக்கான அடிப்படைகளை அமைத்ததும் நெம்புகோல் தத்துவத்தை விளக்கியதும் திருகு பம்பி உட்படப் பல இயந்திரங்களை இவர் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein மார்ச் 14 1879 - ஏப்ரல் 18 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics)மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும் கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical hysics) அவர் செய்த சேவைக்காகவும் 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell ) மார்ச் 3 1847 - ஆகஸ்ட் 2 1922) ஓர் ஆசிரியராகவும் அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது.
ஆன்டன் வான் லீவன்ஹூக் ( Anton van Leeuwenhoek 1632-1723)இ டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஆய்வாளரும் நுண் நோக்கும் கருவிகளை உருவாக்கியவரும் ஆவார். பாக்டீரியாக்கள் ப்ரோடோசோவாக்கள் ஸ்பெர்மடோசோவாக்கள் மற்றும் striped muscle பற்றிய முதல் முழு விவரிப்பைத் தந்தவரும் இவரே.
சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் (Charles Babbage டிசம்பர் 26 1791 - அக்டோபர் 18 1871) பிரித்தானிய கணிதவியலாளர் கண்டுபிடிப்பாளர். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திர கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.
Comments
Post a Comment