கொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன்

கொலம்பஸின் வரலாற்று முக்கியத்துவம்
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்கா பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும்.
உண்மையாக கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் அல்லர் ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார்.முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள் வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட ஐரோப்பாவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும் கொலம்பஸின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக்குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும்.
முதல் பயணம்

- ஆகஸ்ட் 3 கொலம்பஸ் பாலோஸ்-இலிருந்து மூன்று கப்பல்களில் சாண்டா மரியா நின்யா பின்டா புறப்பட்டார். முதலில் அவர் கேனரித்தீவுகளை அடைந்தார்.
- இன்றைக்கும் அவர் முதலில் அடைந்த தீவு எது என்பதில் சர்ச்சை இருந்தாலும் அவர் பகாமாஸ்-இல் ஒரு தீவையே அடைந்திருக்க வேண்டும் என்பது உறுதி.
- கொலம்பஸ் அவருடைய முதல் பயணத்தில் கியூபாவிலும் ஸ்பானியோலா விலும் பயணத்திருந்தார்.
- அங்கே அவர் தான் கொண்டு வந்த தங்கம் மற்றும் கொண்டு வந்த அமெரிக்கப்பழங்குடிகள் ஆகியவற்றை அரசவையில் ஒப்படைத்தார். அங்கே அதுவரை அறியப்படாதிருந்த புகையிலை அன்னாசி மற்றும் ஹன்னாக் ஆகியவைகளைப்பற்றி அங்கே விளக்கினார்.அங்கே அவர் ஒரு மாவீரராக வரவேற்கப்பட்டார். அவருடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி உலகெங்கும் பரவியது.
இரண்டாம் பயணம்
- இரண்டாம் பயணத்தை (1493-1496)-இல் செப்டெம்பர் 24 1493-இல் துவக்கினார். டையனோ ஆதிவாசிகளை வசப்படுத்தவும்இ அத்தீவுகளைக்குடியேற்ற நாடுகளாக்கவும் 17 கப்பல்களில் 1200 பேருடன் வேண்டிய கருவிகளுடன் கிளம்பினார்.
- முதலில் டொமினிக்கா-வையும் பின்னர் வடக்காகக் கிளம்பி குவாடெலோப் மோன்ட்செர்ராட் ஆன்டிகுவா மற்றும் நேவிஸ் ஆகிய சிறிய ஆன்டில்லெஸ்-இல் உள்ள தீவுகளைக் கண்டறிந்து அவற்றிற்கு அப்பெயர்களைச் சூட்டினார்.
- ஜமைக்காவைக் கண்டுபிடித்தார்.
மூன்றாம் பயணம்
1498-இல் கொலம்பஸ் மூன்றாம் முறையாக புதிய உலகிற்கு இளம் பார்த்தலோமி டி லாஸ் காஸாஸ்(இவர் பின்னர் கொலம்பஸின் குறிப்புக்களை தந்தவர்) உடன் கிளம்பினார். இந்த முறை அவர் ட்ரினிடாட் தீவுகளை ஜுலை 31இல் கண்டுபிடித்தார்.
கடைசிப்பயணமும் வாழ்வின் கடைசிக்கட்டமும்
- கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை 1502-1504-இல்(ஸ்பெயினைவிட்டு மே 9 1502) மேற்கொண்டார்.
- 1506-இல் கொலம்பஸ் இறந்தார். அப்போது கூட தான் கண்டுபிடித்ததுஇ ஆசியாவின் கிழக்குக்கரை என்று உறுதியாக நம்பினார். அவருடைய இறப்பின் பின்கூட அவரது பயணம் தொடர்ந்தது.

ஜெனோவாவில் உள்ள கொலம்பஸ் நினைவுச்சின்னம்
கொலம்பஸின் நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளையும் தாண்டி அவர் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்; ஒரு சின்னமாகவும் சகாப்தமாகவும் மாறியுள்ளார்.அவரைப் பற்றிய யூகங்கள் ஒரு கோணத்தில் அவரை ஒரு வரலாற்று நாயகனாகவும் மற்றொரு கோணத்தில் அவரை ஒரு மனித குல எதிரியாகவும் சித்தரிக்கின்றன
கொலம்பஸின் நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளையும் தாண்டி அவர் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்; ஒரு சின்னமாகவும் சகாப்தமாகவும் மாறியுள்ளார்.அவரைப் பற்றிய யூகங்கள் ஒரு கோணத்தில் அவரை ஒரு வரலாற்று நாயகனாகவும் மற்றொரு கோணத்தில் அவரை ஒரு மனித குல எதிரியாகவும் சித்தரிக்கின்றன
புதிய தகவல் நண்பா
ReplyDeleteமிகவும் பயனுள்ள பகிர்வுகளை பகிர்ந்து கொடுக்கிறீங்க.. பாராட்டுக்கள்...
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்க
என்றுன் உங்கள் வாசகனாய்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
நன்றி உங்கள் கருத்துக்கு தமிழ்தோட்டம்
ReplyDeleteநன்றி டிலிப் நண்பா
ReplyDelete