வைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக்கு உள்ளது.


வைரத்தின் தன்மை மற்றும் கதிர்வீச்சுகளால் அதில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆஸ்திரேலியவின் சிட்னி நகரில் உள்ள மெக்கரி பல்கலைக்கழகத்தில் வைர ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் மில்டர்ன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. வைரத்தின் மீது புறஊதா கதிர்கள் (ULTRAVIOLET LIGHT) தொடர்ந்து படுவதால் அதில் பள்ளங்கள் ஏற்படுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

முத்துக்களை போல வைரங்களும் ஆவியாகும் தன்மை கொண்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக புறஊதா கதிர்கள் படும் போது வைரம் விரைவில் ஆவியாகிறது. வேறு சில உலோகங்களைப் போல வைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புறஊதா கதிர்களுக்கு உள்ளது. புறஊதா கதிர்களை தொடர்ந்து செலுத்தியதில் ஒரு சில வினாடிகளிலேயே வைரக் கல்லில் நுண்ணிய பள்ளங்கள் ஏற்பட்டன.அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் இக்கதிர்வீச்சில் இருந்த வைரக் கற்கள் அதிகம் கரைந்தன. சூரிய ஒளியில் புறஊதா கதிர்கள் இருந்தாலும், வைரக் கல்லை பாதிக்கும் அளவுக்கு அவற்றின் வீரியம் இருப்பதில்லை. இதனால் வெயிலில் அணிந்து செல்வதால் வைரம் பாதிக்கப்படுவதில்லை.

நன்றி இணையம்

Comments

  1. நல்ல தகவல். அருமையான தகவல்களையெல்லாம் அள்ளிக் கொடுத்துள்ளீர். வாழ்த்துக்கள்.

    தங்கள் தளத்திலிருந்து நானறியா பல தகவல்களை தெரிந்துக்கொண்டேன். மிக்க நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்