சிவப்பு மழை,மீன் மழை,மஞ்சள் மழை ,முதலை மழை

சிவப்பு மழை
சிவப்பு மழை அல்லது குருதி மழை எனப்படுவது ஓர் அரிதான சிவப்பு அல்லது கபில நிறத்தில் பெய்யும் மழையாகும். இது பல வகைப்பட்ட இலக்கியங்களில் ஒரு துக்க சம்பவத்தின் அறிகுறியாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ எடுத்தாளப்பட்டுள்ளது. எனினும் இது சாதாரண இயற்கை நிகழ்வாகும்.


இது மழையுடன் கலந்த தூசால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கடுமையான காற்றுடன் கலந்திருக்கும் தூசானது நீராவி முகில்களாக ஒடுங்கி மழையாகப் பொழியும் போது சிவப்பு மழையாகப் பொழிவதாகக் கருதப்படுகின்றது.

மழையில் கலந்திருக்கும் ஒரு வகை சிவப்பு அல்காவால் செம்மழை பொழிவதாக இலங்கையில் பொழிந்த சிவப்பு மழைக்கான விளக்கங்கள் கூறுகின்றன.

இதேவேளை அண்மையில் செவனகல மன்னம்பிட்டிய ஹிக்குராங்கொட மற்றும் பதியதலாவ பகுதிகளில் பெய்த சிவப்பு மழையில் இலங்கையில் இதுவரை இனங்காணப்படாத உயிரின வகையொன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 'சிவப்பு நிற' மழை பெய்து வருகிறது.  இலங்கையின் செவனகல பிரதேசத்தில் சிவப்பு மழை பெய்திருக்கிறது. இதேபோல் இந்திகொலபெலஸ்ல ஆகிய கிராமங்களிலும் சிவப்பு மழை பெய்திருக்கிறது.

கடந்த வாரத்தில் இதேபோல பல பகுதிகளில் 'செம்மழை' பெய்திருக்கிறது. இந்த மழை நீர் பட்டிருக்கும் இடங்களில் சிவப்பு நிற திட்டுகள் காணப்படுகின்றன.

வீட்டின் கூரைகள் மரங்களின் இலைகளில் பொதுமக்களின் உடைகளிலும் இந்த செந்நிறத் திட்டு படிந்திருப்பதால் 'ரத்தக் கறை' போல் காணப்படுகிறது. 

இவ்வாறான நிகழ்வு இலங்கை மக்களுக்கு புதிதாக இருந்தாலும்  இது போன்ற நிகழ்வுகள் ஏற்கனவெ வெளிநாடுகளில் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 2005ல் கேரளாவில் இத பொன்ற ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.



ட்ராகோலேமொனாஸ்' எனப்படும் நுண்ணுயிரே குறித்த மாதிரிகளில் இருந்ததாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இச் செம்மழையில் நனைந்தால் அது பொதுமக்களுக்கு தீங்கை உண்டாக்காத நுண்ணுயிர் என்று அறியப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேற்று கிரகங்களில் இருந்து வந்தவர்களால் சிவப்பு மழை தோன்றியிருக்கலாம் என்று முன்னர் பரவலாக கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தன.
எனினும்இ அவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்று ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிரக மண்டல ஆய்வாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிக்கையில்.
இலங்கைக்கு இவ்வாறான சிவப்பு மழை புதிது எனினும் ஏனைய நாடுகளில் இவ்வாறான சிவப்பு நிற மழை வீழ்ச்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெய்திருப்பதாகவும்இ கடலில் இருந்து ஆகாயத்துக்கு நீர் உறிஞ்சப்படும் போது சில சமயங்களில் கடலில் காணப்படுகின்ற அரிதான சிவப்பு நிற மாற்றங்களும் சேர்த்து உறிஞ்சப்படலாம்.

இதன் விளைவாகவே இந்த மழைவீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மீன்மழை

பொதுவாக நாம் வாழும் பகுதியில் எப்போதாவது அதிசயமாக ஆலங்கட்டி மழை பெய்வதாக சிலர் கருதுவதுண்டு. ஆனால் வெளிநாடுகளில் சில சமயங்களில் மீன்மழையும் பொழிகிறது. இம்மீன் மழைகள் சுழல் காற்றினால் ஒரு சிறிய நீர்நிலையே அதனுள் இருக்கும் மீன்கள், முதலைகள், தவளைகள் மற்றும் சிறு உயிரினங்களோடு உறிஞ்சப்பட்டு காற்றில் எடுத்துச்செல்லப்பட்டு வேறொரு இடத்தில் கொட்டப்படுவதே மீன்மழைக்கான காரணம். அவ்வாறு காணப்படும் அழகான மீன்மழையினைக் காணொளியில் காணலாம்.






மஞ்சள் மழை

அட்டன் - குடாஓயா பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை மஞ்சள் மழை பெய்துள்ளது.

மஞ்சள் மழை பெய்வதை அவதானித்த மக்கள் உடனடியாக அதனை சேகரித்துள்ளனர். சுமார் இரண்டு மணிநேரம் இந்த மஞ்சள் மழை பெய்துள்ளதுடன் மக்கள் அதிசயத்துடன் அதை அவதானித்துள்ளனர்.

முதலை மழை

தற்போது மாத்தறை சுல்தானாகொட கெகில்ல பிரதேசத்தில் பாரிய மழையுடன் முதலைக் குட்டியொன்று வீழ்ந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கே. பியதிஸ்ஸ என்வரின் வீட்டுக் கிணற்றிற்கு அருகாமையில் இந்த முதலைக் குட்டி வீழ்ந்துள்ளது.
இந்தக் கிராமத்திற்கு அருகாமையில் முதலைகள் வாழும் எந்தவொரு குளமோ அல்லது வேறும் நீர் நிலைகளோ கிடையாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கிராமத்திற்கு இதற்கு முன்னர் முதலைகள் வந்தததில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

நன்றி இணையம்


Comments

  1. சில விளக்கங்களை ரசித்தேன் சகோ நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்