இது ஒரு புகைப் படத்தை விட சற்று அதிகமானது. ஆனால் வீடியோக் காட்சியை விட கொஞ்சம் குறைவானது…உங்களது விஷேட நிகழ்வுகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு விஷேட புதிய கலையை இரண்டு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இவை அசைவுகளுடன் கூடிய படங்கள். இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும்.
ஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காணலாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும். ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து இந்த எனிமேஷன் போட்டோ கிராபியை உருவாக்கி உள்ளனர். ஒரு படத்தில் சன நெரிசல் மிக்க ஒரு வீதியில் ஒருவர் தனது பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.இன்னொரு படத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலைக்கு வெளிப்பகுதியில் வாகனம் ஒன்று வேகமாகச் செல்வது சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரு படத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்டப் பகுதிதான் அசையும். ஆனால் அது நிச்சயம் பார்ப்பவர்களைக் கவரும், அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும். அது தான் இந்தப படக்கலையின் விஷேட அம்சம்.நன்றி இணையம்
//ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் //
ReplyDeleteCould you give any link to know about these guys?
Try to visit VALAISARAMTry to visit VALAISARAM
ReplyDeleteவலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்
ReplyDeleteகண்ணை நம்பாதே