உலகின் மிகப் பெரிய அற்புத மலர்



பெஸல் நகர தாவரவியல் பூங்காவில் பூத்திருக்கும் அரிய ரக டைடான் அரும் மலரைக் காண்பதற்கு பெருந்திரளான மக்கள் அங்கு வந்த வண்ணம் உள்ளனர்.




உலகில் பூக்கும் மிகப்பெரிய மலர் இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதை ஒரு இயற்கையின் அற்புதமாகவே மக்கள் பார்க்கின்றனர். கடும் சுகந்தம் கெண்ட இந்த மலர் மஞ்சள் நிற மின்குமிழ் ஒன்றின் வடிவில் சுமார் இரண்டு மீற்றர் உயரத்துக்கு நீண்டு வளருகின்றது




இந்த மலர் பெரிய வெள்ளித் தினத்தன்று பூக்க ஆரம்பித்துள்ளது. இதன் விஞ்ஞானப் பெயர் Amorphophallus titanium என்பதாகும். இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுப்பகுதியில் உள்ள மழை வீழ்ச்சிக் காடுகள் தான் இதன் தோற்ற இடம்.




அங்கு இவை சுமார் மூன்று மீற்றர் உயரத்துக்கு வளரும் பண்பு கொண்டவை. இவை அரிதாகப் பூக்கும் ஒரு மலரினம். இதன் சுகந்தம் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை. ஒரு சில நாட்களில் வாடிப்போய்விடும்



பெஸல் நகரில் இந்தப் பூ இந்தளவுக்கு வளர 17 ஆண்டுகள் எடுத்துள்ளன. உலகம் முழுவதும் இதனை ஒத்த 134 பிரதிகள் உள்ளன. அவற்றுள் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்காவில் உள்ளன.

Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்