Posts

உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள்

Image
1 வது நெதர்லாந்து Netherlands 1 வது நெதர்லாந்து Netherlands உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் நாடு நெதர்லாந்து ஆகும். சராசரியான உயரம் 6'0"ஆகும். இதனால் டச்சு அரசாங்கம் கட்டிட தினைக்களுங்களுக்கு புதிய அறிக்கையில் கதவுகளுக்கான உயரம் கட்டாயம் 6 அடிக்கு மேல் இருத்தல் வேண்டும் என்று கட்டாய நிபந்தனை போடப்பட்டுள்ளது. 2 வது சுவிடன் Sweden 2 வது சுவிடன் Sweden சராசரியான உயரம் 5'11."'.ஆகும் 3 வது டென்மார்க் Denmark 3 வது டென்மார்க் Denmark சராசரியான உயரம் 5'11.1" ஆகும் 4 வது Norway நோர்வே 4 வது Norway நோர்வே சராசரியான உயரம் 5'10.7"ஆகும். 5 வது Estonia எஸ்ரேனியா 5 வது Estonia எஸ்ரேனியா சராசரியான உயரம் 5'10.5"ஆகும் 6 வது Finland பின்லாந்து 6 வது Finland பின்லாந்து சராசரியான உயரம் 5'10.2"ஆகும். 7 வது Germany ஜேர்மன் 7 வது Germany ஜேர்மன் சராசரியான உயரம் 5'10.1"ஆகும். 8 வது Greece கிரேக்கம் 8 வது Greece கிரேக்கம் சராசரியான உயரம் 5'10.1". ஆகும். 9 வது USA அமெரிக்கா 9 வது USA அமெரிக்கா அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின...

பச்சோந்தி நிறம் மாறும் விதம்

நிறங்கள் என்றால் இயற்கையும் கூட வரும் நேசம் என்றால் செயற்கையும் கூட வருமா நிறம் மாறுவதால் அது நேசமா? மாறாதிருக்க அது போடுவது வேஷமா? Impressive Chameleon - watch more funny videos பச்சோந்தி ஊர்வன பிரிவைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். பச்சோந்திகள் அவற்றின் மனநிலை வெப்பம்இ ஒளி ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் தோலின் நிறத்தை மாற்றவல்லவை. பச்சோந்தி தான் இருக்கும் இடத்திற்க்கு ஏற்றாற்போல் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தது. இதற்கு காரணம் அதன் தோலில் உள்ள நிற செல்களுக்கும் அதன் மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருக்கிறது . பச்சோந்திக்கு காக்கை கழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. பச்சோந்தி தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது. நேரத்திற்கு ஏற்றாற்போல் உன்னை மாற்றும் மானிடா பச்சோந்தி- நிறம் மாறும் தன் பார்வைக்கேற்ப உன்னைப்போல் உருமாறுவதில்லை உன் வேட்கை தணிக்க நிறம் கொண்டு மனம் மாறும் நீ ம...

பண்டைய கிரேக்கக் கடவுளான பன்னிரு ஒலிம்பியர்கள்

Image
பண்டைய கிரேக்கக் கடவுளான பன்னிரு ஒலிம்பியர்களை பற்றிய பதிவு ஆகும் ஆர்ட்டெமிஸ் ஆர்ட்டெமிஸ் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு முதன்மையான பெண் கடவுள் ஆவார். இவர் ஜூஸ் மற்றும் லீட்டோ ஆகியோரின் மகள். மேலும் இவரும் அப்போலோவும் இரட்டையர்கள். பிறப்பு அறுவடை இயற்கை ஆகியவற்றின் கடவுள ஆவார். இளம்பெண்களைக் காப்பவராகவும் இவர் விளங்குகிறார் . இவர் கைகளில் வில்- அம்பு ஏந்திக் காணப்படுவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் டயானா. ஹெஸ்டியா ஹெஸ்டியா பண்டைய கிரேக்கத் தொல்கதைகளில் வரும் பெண் கடவுள் ஆவார். இவர் ஹார்த் என்று அழைக்கப்படும் செங்கல் அல்லது கல்லால் ஆன அடுப்பிற்கு கடவுள் ஆவார். ஒவ்வோர் வீட்டிலும் உள்ள ஹார்த் இவரது உறைவிடமாகும். மேலும் நகர்மண்டபத்திலும் ஓர் அடுப்பு இருக்கும். அதுவும் இவரது உறைவிடம் ஆகும். பொதுவாக பண்டைய கிரேக்கர்கள் புதிய குடியேற்றங்களை அமைக்கும் போது இங்கிருந்து நெருப்பை எடுத்துச் சென்று புது இடத்தில் வைப்பர் . சூசு சூசு கிரேக்கத் தொல்கதைகளின் படி கடவுள்களின் அரசன் ஆவார். இவர் ஒலிம்ப்பஸ் மலையை ஆள்பவர். வானம் மற்றும் இடி ஆகியவற்றின் கடவுள். இவருடைய சின்னங்கள் இடி கழுகு காளை மற்றும் ஓ...

உலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம்

Image
அரளி என்னும் ஒலியாண்டர் Nerium oleander என்னும் தாவரம் உலகத்திலேயே மிகக்கொடுமையான நச்சுத் தாவரமாக கருதப்படுகிறது .தாவரத்தின் எல்லா பாகங்களும் நஞ்சுதான். பலவகையான நஞ்சுகளும் இந்த தாவரத்தில் காணப்படுகின்றன. இதில் காணப்படும் oleandrin மற்றும் neriine நச்சுக்கள் இதயத்தை பாதிக்கக்கூடியவை. தேனீக்களால் ஒலியாண்டர் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேனை நக்கிய மாத்திரத்திலேயே மரணம் சம்பவிக்கும். ஒலியாண்டர் தாவரத்தின் பூக்கள் அழகானவை. ஆனால் அழகைப்பார்த்து ஏமாந்து போய்விடாதீர்கள். அத்தனையும் நஞ்சு. கொடுமையான நச்சுத்தன்மை இருந்தாலும்கூட அழகிற்காக இந்தத் தாவரம் வளர்க்கப்படுகிறது . தூரக்கிழக்கு நாடுகளில் இருந்தும் மத்தியதரைக்கடல் நாடுகளில் இருந்தும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட இந்த தாவரம் உலர்ந்த வெப்ப நிலைகளிலும் வளம்குறைந்த மண்ணிலும் வளரக்கூடியது. அடர்த்தியான புதர்வடிவில் ஆறுமுதல் பதினெட்டு அடி உயரத்திற்கு ஒலியாண்டர் தாவரம் வளரும். இலைகள் அடர் பச்சை நிறத்திலும் தடிமனாகவும் இருக்கும். கொத்தாகப் பூக்கும் பூக்கள் மஞ்சள் சிகப்பு இளஞ்சிவப்பு வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படும். வறண்ட நிலத்தில் கூட ஒ...

இரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்?

Image
இரவில் வாழும் உயிரினங்களுக்கு இருட்டில் பார்க்கும் கண்கள் உள்ளன . இவற்றின் விழித்திரையில் உள்ள உருளை செல்கள் வித்தியாசமாக இருப்பதாக போரிஃப் ஜோஃபே (லட்விக் மேக்ஸ்மில்லன் பல்கலை) கூறுகிறார் . முதலில் இவர் சொன்னதை எல்லாரும் கேலி செய்தார்களாம். இவர் கண்டுபிடித்த உண்மை நம்பக் கூடியதாக முதலில் இல்லாமல் இருந்ததே காரணம். இருட்டு உயிரினங்களின் விழித்திரை உருளை செல்களில் உள்ள உட்கரு (நியூக்ளியஸ்) வெளிச்சத்தில் வாழும் உயிரினங்களிலிருந்து மாறுபட்டு இருந்தது. வழக்கமாக உட்கருவில் உள்ள டி என் ஏ மூலக்கூறின் கெட்டியாகச் சுற்றப்பட்ட பகுதி கருவின் புறப்பகுதியிலும்இ தொள தொளவென்று இருக்கும் டி என் ஏ பகுதி நடுப்பகுதியிலும் இருக்கும். இப்பகுதிகளை முறையே ஹெட்டிரோ குரோமேட்டின் மற்றும் யூக்குரோமேட்டின் என்றும் அழைப்பார்கள். இருட்டு உயிரிகளின் உருளைச்செல்களின் உட்கருவில் இந்த அமைப்பு தலைக்கீழாக இருந்தது. கருவின் அமைப்பு அதன் திறமையான செயலுக்கு உறுதுணையாக இருப்பதால் பகல் உயிரிகளில் வெளியே கெட்டியும் உள்ளே கொள கொள வென்றும் இருக்கும்படி அமைந்திருக்கிறது. இருட்டு உயிரிகளில் இது மாறி அமைந்திருப்பது வேறு ஒரு முக்கிய ப...

உலகில் தாவர உணவுகளை மட்டுமே உண்ணும் பகீரா கிப்லிங்கி சிலந்தி

Image
தாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்தி வகை ஒன்று பற்றிய தகவல்களை அறிவியலாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர். பகீரா கிப்லிங்கி (Bagheera kiplingi )எனப்படும் இவ்வகை சிலந்திகள் நடு அமெரிக்காவிலும் மெக்சிக்கோவிலும் வாழ்ந்து வருகின்றன. இவையே சிலந்தி வகைகளில் தாவர உணவை மட்டும் உண்பவை. இவற்றைவிட ஏனைய இதுவரையில் அறியப்பட்ட கிட்டத்தட்ட 40000 சிலந்தி வகைகள அனைத்தும் ஊனுண்ணி வகைகளாகும். இது குறித்த ஆய்வுக் கட்டுரை 'நடப்பு உயிரியல்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஐ க்கிய அமெரிக்காவில் பென்சில் வேனியாவின் விலனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் கறி என்பவரின் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பாயும் சிலந்திதேள் வகுப்பு வகுப்பைச் சேர்ந்த இவை 5-6மிமீ நீளமானவை. புரதங்கள் நிறைந்த அக்காசியா வகைத் தாவரங்களின் குருத்துக்களையே இவை பெரும்பாலும் உண்கின்றன. ஆனாலும் இம்மரத்தின் இலைகளை அடைவதற்கு இச்சிலந்தி அம்மரங்களின் துளைகளில் வாழும் எறும்புகளை விலக்கியே வர வேண்டியிருக்கிற து. இவ்வகை சிலந்திகளின் ஊனுண்ணாமை முதற் தடவையாக கொஸ்டா ரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் எரிக் ஒல்சென் என்பவர...

இவ்வளவு பெரிய அலகு எதற்கு டூக்கான் பறவைக்கு

Image
மஞ்சக் கழுத்து டூக்கான் டூக்கான் அல்லது 'பேரலகுப் பறவை' என்பது கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும் வெப்ப மண்டல அமெரிக்கப் பறவை இனம். இது நடு அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படும் பகுதியில் வாழ்கின்றது. பல நூற்றாண்டுகளாக ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று வியந்து வந்தனர். இப்பொழுது இதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள புராக் பல்கலைக்கழகத்தைச்(Brock University) சேர்ந்த முனைவர் கிளென் டாட்டர்சால்(Glenn Tattersall) பிரேசிலில் உள்ள ஆய்வாளர்களுடன் சேர்ந்து அகச்சிவப்புக் கதிர்களைப் படம் பிடிக்கும் கருவி ஒன்றைக்கொண்டு டூக்கான் பறவையைப் படம் பிடித்தார். டூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட ராம்ப்பாசுட்டோசு டோக்கோ(Ramphastos toco) என்னும் பறவையை அகச்சிவப்பு ஒளிப்படம் எடுத்தார். இக்கருவியின் துணையால் அலகின் வெப்பநிலையையும் உடலின் வெப்பநிலையையும் துல்லியமாகப் படம் எடுக்க முடிந்தது. அவர் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இப்பறவையின் உடலின் வெப்பத்தை அலகு வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்த...