இரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்?

இரவில் வாழும் உயிரினங்களுக்கு இருட்டில் பார்க்கும் கண்கள் உள்ளன. இவற்றின் விழித்திரையில் உள்ள உருளை செல்கள் வித்தியாசமாக இருப்பதாக போரிஃப் ஜோஃபே (லட்விக் மேக்ஸ்மில்லன் பல்கலை) கூறுகிறார். முதலில் இவர் சொன்னதை எல்லாரும் கேலி செய்தார்களாம். இவர் கண்டுபிடித்த உண்மை நம்பக் கூடியதாக முதலில் இல்லாமல் இருந்ததே காரணம்.

இருட்டு உயிரினங்களின் விழித்திரை உருளை செல்களில் உள்ள உட்கரு (நியூக்ளியஸ்) வெளிச்சத்தில் வாழும் உயிரினங்களிலிருந்து மாறுபட்டு இருந்தது. வழக்கமாக உட்கருவில் உள்ள டி என் ஏ மூலக்கூறின் கெட்டியாகச் சுற்றப்பட்ட பகுதி கருவின் புறப்பகுதியிலும்இ தொள தொளவென்று இருக்கும் டி என் ஏ பகுதி நடுப்பகுதியிலும் இருக்கும். இப்பகுதிகளை முறையே ஹெட்டிரோ குரோமேட்டின் மற்றும் யூக்குரோமேட்டின் என்றும் அழைப்பார்கள். இருட்டு உயிரிகளின் உருளைச்செல்களின் உட்கருவில் இந்த அமைப்பு தலைக்கீழாக இருந்தது.

கருவின் அமைப்பு அதன் திறமையான செயலுக்கு உறுதுணையாக இருப்பதால் பகல் உயிரிகளில் வெளியே கெட்டியும் உள்ளே கொள கொள வென்றும் இருக்கும்படி அமைந்திருக்கிறது. இருட்டு உயிரிகளில் இது மாறி அமைந்திருப்பது வேறு ஒரு முக்கிய பணிக்காக இருக்கக்கூடும் என்பது சொல்லாமலே விளங்குகிறது.

இருட்டு உயிரிகளின் உட்கரு சிறிய லென்ஸர் மாதிரி செயல்பட்டு இருட்டில் கிடைக்கும் சொற்ப வெளிச்சத்தையும் விழித்திரையில் சிதறாமல் சேகரித்து வழங்குகிறது. பகல் உயிரிகளில் உட்கருவானது வெளிச்சத்தை சிதறடித்துவிடுகிறது. பகலில் போதிய வெளிச்சம் இருப்பதால் இது பெரிய குறையாகத் தெரிவதில்லை.

செல்லின் உட்கருவிற்கு இப்படி ஒரு பூதக்கண்ணாடி போல் செயல்படக்கூடிய பணி இருக்கும் என்பது உயிரியலில் புத்தம் புதிய செய்தி. அதனால்தான் இந்த கண்டுபிடிப்பு முதலில் கேலி செய்யப்பட்டது.

பூனை பற்றிய தகவல்
பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இவை பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை (5.5–16 இறாத்தல்) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும்.
பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33).
நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது.
பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 கிலோஹேர்ட்ஸ்.
நுகரும் புலன் மனிதனை விட 14 மடங்கு அதிகம்.
நாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை 38 - 39 °C (101 - 102.2 °F)
வரை காணப்படும்.
பூனைகள் இரவில் நன்றாகப் பார்க்கும் திறன் கொண்டவை

Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்