Posts

இவ்வளவு பெரிய அலகு எதற்கு டூக்கான் பறவைக்கு

Image
மஞ்சக் கழுத்து டூக்கான் டூக்கான் அல்லது 'பேரலகுப் பறவை' என்பது கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும் வெப்ப மண்டல அமெரிக்கப் பறவை இனம். இது நடு அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படும் பகுதியில் வாழ்கின்றது. பல நூற்றாண்டுகளாக ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று வியந்து வந்தனர். இப்பொழுது இதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள புராக் பல்கலைக்கழகத்தைச்(Brock University) சேர்ந்த முனைவர் கிளென் டாட்டர்சால்(Glenn Tattersall) பிரேசிலில் உள்ள ஆய்வாளர்களுடன் சேர்ந்து அகச்சிவப்புக் கதிர்களைப் படம் பிடிக்கும் கருவி ஒன்றைக்கொண்டு டூக்கான் பறவையைப் படம் பிடித்தார். டூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட ராம்ப்பாசுட்டோசு டோக்கோ(Ramphastos toco) என்னும் பறவையை அகச்சிவப்பு ஒளிப்படம் எடுத்தார். இக்கருவியின் துணையால் அலகின் வெப்பநிலையையும் உடலின் வெப்பநிலையையும் துல்லியமாகப் படம் எடுக்க முடிந்தது. அவர் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இப்பறவையின் உடலின் வெப்பத்தை அலகு வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்த...

மிக பிரபலியமான போர்க் கப்பல்கள்

Image
உலக வரலாற்றில் போர்க் கப்பல்களின் பங்கு இன்றி அமையாத ஒன்றாகும். அதற்கான காரணம் அந்த அந்த நாடுகளின் பலத்தினை உயர்த்துவதுக்கு போர்க் கப்பல்களின் பங்கும் ஒன்றாகும்.அவைகளின் சில போர்க் கப்பல்களின் விபரம் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz (CVN-68)) உலகில் உள்ள மிகப் பிரமாண்டமான அணு சக்தி போர்க் கப்பல்களில் ஒன்று. 1975 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கிய இந்தக் கப்பல் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட கப்பல் ஆகும். இந்தக் கப்பலில் 75 விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் இந்தக் கப்பல் பயணிக்கும். கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஈராக் போரின்போது இந்தக் கப்பலிலிருந்துதான் அமெரிக்க விமானங்கள் ஈராக்கைத் தாக்கி வந்தன. இந்தக் கப்பலில் 2 அணு உலைகள் உள்ளன. அணு சக்தியின் மூலம் இந்தக் கப்பல் இயங்குகிறது. இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம் 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம்இ ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம் ஹெலிகாப்டர் ஆகியவையு...

ஆந்தைகளின் இராட்சியம்

Image
ஆந்தைகள் ஒரு காலத்தில் நம் முன்னோர்களை ஆட்டிப்படைத்து தான் இருக்கிறது அதற்கான சான்றுகள் கீழே இந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டில் ஆந்தையின் அலறல் பயத்துக்குரியதாகவும் கெட்ட சகுனமாகவுமே கருதப்பட்டது. ஆந்தைகளின் புத்தி கூர்மைக்கு சான்றாக அத்தீனா தெய்வத்துடனும் சம்பந்தப்படுத்தப்பட்டு வந்தது. அத்தீனா கிரேக்கக் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் அறிவு தந்திரம் போர் இவற்றுக்கான கடவுள் ஆவார். இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே ஏதென்ஸ் நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது. பண்டைய எகிப்தியரின் எழுத்து வரிவடிவங்களில் 'ம்' ஒலியைக் குறிக்க ஆந்தை உருவமே பயன்பட்டது. எனினும் ஊனுண்ணியான இது உயிர்பெற்றுத் தாக்குவதைத் தடுக்க அதன் கால்கள் முறிந்த நிலையிலேயே வரைந்து வந்தார்கள். ஜப்பானியப் பண்பாட்டில் ஆந்தை இறப்பின் குறியீடாகக் கருதப்பட்டதுடன் இதனைக் காண்பதும் கெடுதியாகக் கருதப்பட்டது. ஹோபி பண்பாட்டில் இவை ...

சிகாகோ நகரம் உருவாக்கப்பட்டு ஆகஸ்டு 12 டன் 177 வயது

Image
சிக்காகோ நகரம் 1833ம் ஆண்டு ஆகஸ்டு 12 அமைக்கப்பட்டது . அன்றைய தேதி கணக்கெடுப்பின்படி சிகாகோ நகரின் மக்கள்தொகை 350 ஆக இருந்தது . 19ம் நூற்றாண்டின் முடிவில் சிகாகோ மாநகர் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய நகரம் என்னும் பெருமையை பெற்றது. இன்று அமெரிக்காவின் பெ ரிய நகரங்களுள் மூன்றாவதாகவும். உலகின் பெரிய நகரங்களுள் சனத்தொகைப்படி 29 வது இடத்திலும் சிகாகோ உள்ளது . சிகாகோ வணிக வாரிய கட்டிடம் சிகாகோ ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராகும். மத்திய-மேற்கு அமெரிக்க நிலப்பகுதியில் அமைந்திருக்கும் இந்நகர் வணிகம் தொழில் கலாச்சாரம் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்புடன் விளங்குகிறது. இந்நகரில் இதன் வரலாற்று சிறப்பினால் அமெரிக்காவின் இரண்டாம் நகர் என்று வர்ணிக்கப்படுகிறது. மக்கள்தொகையில் நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை அடுத்து சுமார் 3 மில்லியன் மக்கள் தொகையுடன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகராக விளங்குகிறது. சிக்காகோவின் சியேர்ஸ் கோபுரம். 108 அடுக்கு மாடிகள் கொண்ட இக்கட்டிடம் 1974ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது . சிகாகோ என்ற பதம் சீக்காக்கா என்ற மயாமி-இலினொய் மொழி பதத்திலிருந்து...

உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு

Image
ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா கொழுத்த மனிதன் (Fat Man) என்ற பெயரைக் கொண்ட இரண்டாவது அணுகுண்டை வீசி ஆகஸ்டு 9 உடன் 65 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது உலக வரலாற்றில் இரண்டு முறை அணுகுண்டு போருக்காக உபயோகபடுத்த பட்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா தன்னை தாக்கியஜப்பானை தாக்கியழிக்க 2 அணுகுண்டுகளை பயன்படுத்தியது. முதல் அணுகுண்டு சின்னப் பையன் ( Little boy ) என்று பெயரிடபட்டு ஆகஸ்டு 6ஆம் நாள் முன்காலை இரோசிமா நகரின் மீது வெடிக்க பட்டது. மூன்று நாட்களுக்குப் பின் இரண்டாவது அணுகுண்டு கொழுத்த மனிதன் ( fat man ) நாகசாகி நகரின் மீது வீச பட்டது. இந்த குண்டு வீச்சுகளால் பலியானோர் எண்ணிக்கை சுமார் 120,000. கதிரியக்கத்தினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை கணக்கிலடங்கா . ' கொழுத்த மனிதன்' ( Fat Man ) 'கொழுத்த மனிதன்' ( Fat Man ) என்பது ஜப்பான் நகரான நாகசாக்கி மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டாகும் . அமெரிக்காவின் முன்னைய அணுவாயுத வடிவமைப்புக்கு ...

உலகில் முதல் முதலில் வீசப்பட்ட (Little Boy) சின்னப் பையன் எனும் அணுகுண்டு

Image
ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசி நாளையுடன் 65 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் (Little Boy) என்ற பெயரைக் கொண்ட அணுகுண்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தது யாவரும் அறிந்ததே சின்னப் பையன் (Little Boy) போருக்குப் பின்னரான 'சின்னப் பையன்' அணுகுண்டின் மாதிரி சின்னப் பையன் (Little Boy) என்பது ஜப்பான் நகரான ஹிரோசிமா மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே(Enola Gay) என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும் சின்னப் பையன் அணுகுண்டு பற்றிய தரவுகள் வகை :- அணு ஆயுதம் அமைக்கப்பட்ட நாடு :- ஐக்கிய அமெரிக்கா எடை :-8,818.49 இறாத்தல் or 4,000 Kg நீளம் :-9.84...

இணையத்தில் எம்மவர்கள் பகுதியில் யாழ்தேவியின் நட்சத்திர பதிவராக நானும்

Image
கடந்த ஞாயிறு தினக்குரலில் அதாவது 01 ஆகஸ்ட் ல் " இணையத்தில் எம்மவர்கள்" பகுதியில் யாழ்தேவியின் நட்சத்திர பதிவராக என்னை கௌரவிக்கும் " யாழ்தேவி இணையம்" மற்றும் தினக்குரல் பத்திரிகை க்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் முதற்கண் இன்று வரை எனது வலைப்பூவை பார்த்து குறை, நிறைவான கருத்துக்களை கூறும் அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நான் வலைப்பூ மூலமாக கூறுவது என்னவென்றால் வலைப்பூவை ரசியுங்கள் உங்கள் கருத்துகளை தயங்காமல் கூறுங்கள் உங்களுக்கு பிடித்த வலைப்பூக்கு மறக்காமல் வோடடுக்களை இடுங்கள் அதன் முலம் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். நீங்களும் ஒரு வலைப்பூவாளர்களாக மாறி உங்களுக்கு பிடித்த விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . நட்சத்திரம் என்ற அந்தஸ்து பதிவர்களை பொறுத்தவரையில் மணி மகுடம் தான். அந்த வகையில் வலைப்பூவில் வாழ்த்தியவர்களை விட பத்திரிகை பார்த்து வாழ்த்தியவர்கள் பலர். எல்லோருக்கும் நன்றிகள்.