உலகில் முதல் முதலில் வீசப்பட்ட (Little Boy) சின்னப் பையன் எனும் அணுகுண்டு

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசி நாளையுடன் 65 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் (Little Boy) என்ற பெயரைக் கொண்ட அணுகுண்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தது யாவரும் அறிந்ததே

சின்னப் பையன் (Little Boy)

போருக்குப் பின்னரான 'சின்னப் பையன்' அணுகுண்டின் மாதிரி
சின்னப் பையன் (Little Boy) என்பது ஜப்பான் நகரான ஹிரோசிமா மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே(Enola Gay) என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும்





சின்னப் பையன் அணுகுண்டு பற்றிய தரவுகள்

வகை :-அணு ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடு :- ஐக்கிய அமெரிக்கா
எடை :-8,818.49 இறாத்தல் or 4,000 Kg
நீளம் :-9.84 அடி or 3.0 மீற்றர்
விட்டம் :-2.3 அடிor 0.7 மீற்றர்
Blast yield :-13 முதல் 16 கிலோதொன்

ஹிரோஷிமா சமாதான நினைவகம்
ஜப்பானிய மொழியில் அணுகுண்டுக் குவிமாடம் (Atomic Bomb Dome) எனப் பொருள்படும் கென்பாக்கு டோம் என்னும் பெயர் கொண்ட ஹிரோஷிமா சமாதான நினைவகம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா இந்த நகரத்தின் மீது முதலாவது அணுகுண்டைப் போட்டது. இதன் அவலங்களை நினைவுகூரும்வகையில் கட்டப்பட்டதே இந்த நினைவகம். இது 1996 ல் நிறுவப்பட்டது.ஆரம்பத்தில் இக் கட்டிடம் செக் நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரான ஜான் லெட்செல் (Jan Letzel) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்