Posts

நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா?

Image
நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது என்று கேட்டால் "அதுவா நிக்குது விடுங்கப்பா "என்று கூறுவோர் நம்மில் பலர். ஆனால் விஞஞானிகள் அதற்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளனர்.அதைப்பற்றிய விளக்கம் பின்வருமாறு நீர் நாரை (Flamingo)என்பது நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் கொண்ட பறவை. இப்பறவைகள் ஏன் ஒரு காலிலேயே நீண்ட நேரம் நிற்க விருப்பமுள்ளவை. விலங்குக்காட்சிச் சாலைகளுக்கு செல்லும் பலரும் கேட்கும் கேள்வி இது. ஆனாலும் இதற்கு எவரும் விளக்கமான பதில் தரவில்லை. இப்போது கரிபியன் நீர்நாரைகளை நீண்டகாலம் ஆய்வு நடத்திய அறிவியலாளர்கள் இதற்கு ஒரு விடை கண்டுபிடித்துள்ளார்கள். நீர்நாரைகள் தமது உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கே ஒரு காலில் நிற்கின்றன என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பிலடெல்பியாவின் புனித யோசப் பல்கலைக்கழகத்தின் உளவியல் வல்லுநர்கள் மத்தியூ அண்டர்சன் சேரா வில்லியம்ஸ் ஆகியோர் (பரிணாம) படி வளர்ச்சியின் நடத்தைகளை ஆய்வு செய்பவர்கள். இவர்கள் நீர்நாரைகளின் நடத்தைகளை ஆராய்ந்தார்கள். குறிப்பாக மனிதர்கள் இடக்கை வலக்கை பழக்கங்கள் கொண்டிருப்பது போல நீர்நாரைகள் தமது உடலின் எப்பகுதியை த...

85ஆவது வயதில் விமான கறுப்பு பெட்டி'யின் தந்தை மரணம்

Image
விமான விபத்துக்களின் போது அதற்கான காரணத்தைக் கண்டறிய உதவும் கறுப்பு பெட்டியைக் கண்டுபிடித்தவரும் பிரபல அவுஸ்திரேலிய விஞ்ஞானியுமான டேவிட் வொரென் தனது 85ஆவது வயதில் 19/07/2010 காலமானார். கறுப்பு பெட்டியைக் கண்டுபிடித்த டேவிட் வாரன் பற்றிய சிறு குறிப்பு கறுப்பு பெட்டி'யின் தந்தை டேவிட் ரொனால்ட் டி மே வாரன் (David Ronald de Mey Warren) பிறப்பு மார்ச் 20 1925 - இறப்பு ஜூலை 19 2010) என்பவர் விமானத்தின் தகவல் பரிமாற்றத்தினை பதிவு or கறுப்பு பெட்டி செய்யும் விமான தரவு பதிவியைக் கண்டுபிடித்தவரும் ஆஸ்திரேலிய அறிவியலாளரும் ஆவார். வாரன் ஆஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தில் குரூட் ஐனட் என்ற தீவில் ஐரோப்பிய வம்சாவழிப் பெற்றோருக்கு முதலாவது பிள்ளையாகப் பிறந்தார். இவரது தந்தை 1934ஆம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். சிட்னிப் பல்கலைக்கழகத்தில் அறிவியல்பட்டதாரியானார். தான் கண்டுபிடித்த கருப்புப் பெட்டியுடன் டேவிட் வாரன் 1952 முதல் 1983 வரை மெல்பேர்ணில் உள்ள பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தில் வானூர்தி ஆய்வாளராகப் பணியாற்றினார். 1953 இல் கொமெட் என்ற உலகின் முதலாவது பயணிகள்...

பண்டய காலத்தில் பயன்படுத்திய நாட்காட்டிகள்

Image
கிரெகொரியின் நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டி என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும் . இது யூலியின் நாட்காட்டியின் ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரானஅலோசியஸ் லிலியஸ்(Aloysius Lilius)என்பவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய பாப்பரசரான 13வது கிரெகரியின்ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இதன்படி இயேசுபிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன மேலும் இக்காலப்பகுதி 'எம் ஆண்டவரின் ஆண்டு' எனவும் பெயரிடப்பட்டது. கிபி 6 வது நூற்றாண்டில் உரோமை பாதிரியார் ஒருவரால் துவக்கப்பட்ட முறையாகும். யூலியின் நாட்காட்டி லியின் நாட்காட்டி அல்லது சூலியன் நாட்காட்டி என்பது கிமு 46 இல் யூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது உரோம் உரோமில் பாவனையில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்தரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்க...

ஐக்கிய அமெரிக்காவின் புகழ் மிக்க விண்வெளி வீரர்கள்

Image
ஐக்கிய அமெரிக்காவின் புகழ் மிக்க விண்வெளி வீரர்கள் பற்றிய தொகுப்பாகும் எட்வர்ட் ஹிகின்ஸ் வைட் எட்வர்ட் ஹிகின்ஸ் வைட் (Edward Higgins White) நவம்பர் 14 1930 – ஜனவரி 27 1967) அமெரிக்கவான்படையின் பணியாளரும் நாசா விண்வெளி வீரரும் ஆவார். ஜூன் 3 1965 ஆம் ஆண்டில்விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். அப்பல்லோ 1 திட்டத்தில் இணைந்து பயிற்சி பெறும் போது கொல்லப்பட்டார். சாலி கிறிஸ்டென் றைட் சாலி கிறிஸ்டென் றைட்(Sally Kristen Riden) பிறப்பு: மே 26 1951 அமெரிக்க இயற்பியலாளரும்நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனையும் ஆவார். விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆவார். இவர் சாலஞ்சர் மீள்விண்கலத்தில் 1983 இலும் 1984ஸ இலும் இரு தடவைகள் விண்வெளி சென்றார். இவருக்கு முன்னர் சோவியத்தைச் சேர்ந்த வலண்டீனா டெரெஷ்கோவா (1963) மற்றும் ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா (1982) ஆகிய பெண்கள் விண்ணுக்குச் சென்றிருந்தனர். நீல் ஆம்ஸ்ட்றோங் நீல் ஆம்ஸ்ட்றோங் Neil_Armstrong (பிறப்பு - ஆகஸ்ட் 05 1930 தமிழ்நாட்டு எழுத்துக்கூட்டல் வழக்கு - நீல் ஆம்ஸ்ட்ராங்) சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதராவார். ஜூலை 20 1969இல் அமெரிக்க...

உலகத்தில் அழியும் தறுவாயில் உள்ள சில அரிய இனங்கள்

Image
லூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம் Beluga லூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம் வெண்திமிங்கலம் வடதுருவப்பகுதிக் கடலில் மட்டும் வாழும் ஒரு வகைபாலூட்டி. இந்தச் சிறிய வகை திமிங்கிலம் 5 மீட்டர் (16அடி) நீளம் வரை வளரக்கூடியது. அனைத்து வகையான கடல் பன்றிகளை (டால்பின்) விடப் பெரியதாகவும் (மிகப்பெரிய டால்பின்வகைகளை அல்ல) அனைத்து வகையான பற்கொள் கொண்ட திமிங்கிலங்களை விட சிறியதாக தோற்றம் கொண்டது. பெண்பால் வகையை விட ஆண் வகைகள் பெரியதாக வளரும். ஆண் வெள்ளைத் திமிங்கிலங்கள் 1360 கிலோ வரையும் பெண் 900 கிலோ வரை எடை கொண்டது. பிறந்த உடன் 1.5 மீட்டர்(5 அடி) நீளமும் 80 கிலோ எடையும் இருக்கும். பொதுவாக பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் இருக்கும் . Sarus Crane சாரசு கொக்கு சாரசு கொக்கு என்பது இந்தியாவில்நடுப்பகுதியிலும் கங்கையாற்றுப்படுகையிலும் வட பாக்கித்தான் நேபாளம் தென்கிழக்கு ஆசியா ஆத்திரேலியா ஆகிய பகுதிகளிலும் காணப்படும் ஒரு வகைப் பெரியகொக்கு. இது 5 அடி உயரம் வரை இருக்கும் நன்கு வளர்ந்த சாரசு கொக்குகள் சிவப்பு நிறத்தலையையும் வெளுத்த உச்சந்தலையையும் கொண்டு இருக்கும். அலகுகள் கருத்தவை. இறக்கையின் நுனிப்பகுதி கருப்ப...

சில கடல்வாழ் உயிரினங்களும் அவற்றின் தனிச் சிறப்புக்களும்

Image
சாக்குக்கணவாய் ( ஒக்டோபஸ்) சாக்குக்கணவாய் (தமிழில் பேய்க்கடம்பான்,சாக்குச்சுருளி, சிலந்திமீன்,நீராளி எனவோ அல்லது ஆங்கிலப் பெயரை ஒலிப்பெயர்த்து ஒக்டோபஸ் என்றோ அல்லது தமிழக வழக்குப்படி ஆக்டோபஸ் என்றோ வழங்கலாம்) என்னும் கடல்வாழ் விலங்கு எட்டுக்கைகள் கொண்ட எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு. சாக்குக்கணவாய் என்னும் இவ்விலங்கு மெல்லுடலிகள்(Mollusca)என்னும் தொகுப்பில் இதலைக்காலிகள்(cephalopod)என்னும் வகுப்பில் எட்டுக்காலிகள் அல்லது (Octopoda) எண்காலிகள் என்னும் உயிரின வரிசையில் உள்ள ஒரு விலங்கு. தலைக்காலிகள் (cephalopod)என்னும் வகுப்பில் 300 வகையான சாக்குக்கணவாய் உள்ளன என்று கண்டிருக்கின்றார்கள்.இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். சாக்குக்கணவாய் உடலில் எலும்பு இல்லாததா ல் மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவர இயலும். இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. கணவாய்க்கு மூன்று இதயங்கள்உண்டு . கணவாயின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். கணவாய் இரத்தத்தில் செப்பு உள்ளஈமோசயனின் (hemocyanin) என்னும் புரதப்பொருள் உள்ளதால் உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக ம...

உலகில் அழிந்து வரும் விலங்குகள் தொகுப்பு-02

Image
எனது முந்தைய பதிவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். மனிதன் தோன்றுவதற்கு முன்னேயே தோன்றிய மிருகங்கள் அழிந்து வருகிறது என்றால் அடுத்து அழியப்போவது மனிதர்கள்தான்... மிருகங்களை அழித்து வருவதன் மூலம் மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ள முற்படுகிறான் என்றுதான் கொள்ள வேண்டும்.. இன்றைய உலகில் மனிதனின் உணவுத்தேவைக்காகவும் வேறு சில தேவைக்காகவும் நாள்தோறும் விலங்குகள் வேட்டை ஆடப்படுகிறது. இதனால் சில விலங்குகள் அழியும் தறுவாய் மிக விரைவில் அவைகளில் சில விலங்குகள் .... பனிக்கரடி polar bear பனிக்கரடி (துருவக் கரடி) நில உருண்டையின் கடும் உறைபனி சூழ்ந்தஆர்க்டிக் பகுதியில் காணப்படும் இவை ஏறத்தாழ 20-25 ஆண்டுகள் வாழும் வெண்ணிறக்கரடி இனமாகும். இது இறைச்சி உண்ணும் ஊனுண்ணிப்பாலூட்டி. இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாடவல்லது. இவற்றின் முதன்மையான உணவு சீல் ஆகும். வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோகிராம்எடையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோகிராம் எடையுடையவை. இவை இளவேனிற் (வசந்த) காலத்தில் கருத்தரிக்கின்றன. இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240 நாட்களாகும். பொதுவாக இரண்டு குட்டிகள் பிறக...